அம்மாடி.. எத்தனை கல்யாணம்! திருச்செந்தூரில் எங்க பார்த்தாலும் கல்யாண ஜோடிதான்! செம கூட்டம்!

  • தூத்துக்குடி: ஆடி மாதம் முடிவடைந்துள்ள நிலையில் ஆவணி மாதம் தொடங்கி இருக்கிறது. அதுவும், முதல் முகூர்த்த தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, சுபமுகூர்த்த தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

    Advertisement

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    Advertisement

    இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் சுப முகூர்த்த தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    கோவில் கடல் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் முடி காணிக்கை செலுத்தவும், மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடவும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று சுப முகூர்த்த தினம் என்பதால் கோவில் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

    Advertisement

    இதனால் எங்கு பார்த்தாலும் மணமக்கள் உலா வருவதை பார்க்க முடிந்தது. ஆடி மாதத்தில் பொதுவாக தமிழகத்தில் எந்தவித சுப நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை. குறிப்பாக புதுமனை புகு விழாக்கள், திருமணங்கள் ஆகியவற்றை ஒத்தி வைப்பது வழக்கம். திருமணமான ஜோடிகளை கூட முன்னோர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஆடி மாதம் முடிவடைந்து தற்போது ஆவணி மாதம் தொடங்கி இருக்கிறது. மேலும் வளர்பிறை முகூர்த்தமும் வந்திருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருமண நிகழ்ச்சிகள், புதுமனை புகு விழாக்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருமண தளமான திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்கின்றனர்.

    Advertisement

    மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்களும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. முகூர்த்த நேரம் நெருங்க நெருங்க தாலி கட்டியவுடன் அங்கிருந்தவர்கள் கிளம்பி அடுத்த ஜோடி திருமணத்துக்கு தயாரானது. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் ஒரே நேரத்தில் திருச்செந்தூர் சுவாமி கோவிலில் நடைபெற்ற திருமண ஜோடிகள், திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள், வழக்கமாக வரும் பக்தர்கள் என கூட்டத்தால் திருச்செந்தூரே திணறிப் போனது.

    English Summary

    Tiruchendur temple witnesses huge crowds as over 100 weddings take place on an auspicious Avani month day.