Group 4: குரூப் 4 தேர்வுக்கு தயாராகுகிறீர்களா? தேர்வர்களுக்கு அரசு கொடுத்த முக்கிய அறிவிப்பு! இலவச பயிற்சி

  • தூத்துக்குடி: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியான நிலையில் தேர்வர்கள் தீவிரமாக அதற்கு தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் போட்டி தேர்வுக்கு சென்று படிக்க முடியாதவர்கள் பயன்பெறும் வகையில் அரசு இலவச குரூப் 4 பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இதற்கு விண்ணப்பித்து தேர்வர்கள் பயனடையலாம்.

    Advertisement

    டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த குரூப் 4 தேர்வு அறிவிப்பு கடந்த 6 ஆம் தேதி வெளியானது. மொத்தம் 6,574 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் காலியிடங்கள் உள்ளன.

    Advertisement

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

    குரூப் 4 தேர்வில் இன்னும் கூடுதலாக 2 ஆயிரம் பணியிடங்கள் வரை இணைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்வு அறிவிப்புக்கு முன்பே இரவு பகலாக அமர்ந்து தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருவதை பார்க்க முடிகிறது. தேர்வில் வெற்றி பெற்றால் எந்த சிபாரிசும் இன்றி அரசு வேலை கிடைக்கும் என்பதால், பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக இந்த குரூப் 4 தேர்வு உள்ளது.

    இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் அரசு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்துகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 14 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    Advertisement

    அரசு வெளியிட்ட அறிவிப்பு

    தூத்துக்குடி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தேர்வு முகமைகளால் அவ்வப்போது அறிவிக்கப்படும் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 6,574 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

    இந்த தேர்வானது வருகிற 10.01.2027 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 05.11.2026 ஆகும். கூடுதல் விவரங்களை அறிய https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    இலவச பயிற்சி வகுப்பு

    இந்த தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 14 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்க உள்ளது. பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு ஸ்மார்ட் போர்டு பயன்படுத்தி நடத்தப்பட உள்ளது.

    மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இந்த போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புத் துறையின் www.tamilnaducareerservices.tn.gov.in அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய வருட வினாத்தாள்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

    இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகம் என்ற டெலிகிராம் சேனலில் கொடுக்கப்பட்டு உள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண் டும். மேலும், 0461-2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து தங்களது பெயரை பதிவு செய்யலாம்.

    டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பு அரசே நடத்தக்கூடியது. முற்றிலும் இலவசம் ஆகும். தனியார் பயிற்சி மையங்களுக்கு பல ஆயிரம் செலவு செய்து படிக்க முடியாது என நினைக்கும் தேர்வர்களுக்கு இது பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    TN Govt: With the release of the TNPSC Group 4 exam notification, candidates are preparing intensively. To assist those unable to attend external coaching classes, the government is conducting free Group 4 training sessions; candidates can apply and benefit from this initiative.