தூத்துக்குடியில் தோன்றிய Tornado.. இப்படி நடக்க வாய்ப்பே இல்லை! வாயடைத்து நின்ற ஆய்வாளர்கள்


  • தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் வானிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், தூத்துக்குடியில் இன்று சூறாவளி ஒன்று வானத்திலிருந்து இறங்கி வந்து தரையை தொட்டிருக்கிறது. இப்படியான வித்தியாசமான நிகழ்வை இதற்கு முன்னர் அப்பகுதி மக்கள் யாரும் பார்த்ததே இல்லை. என்ன நடந்தது? பார்க்கலாம் வாங்க.

    Advertisement

    இன்று மதியம், தூத்துக்குடி மக்கள் அதிசயமான ஒரு விஷயத்தை பார்த்தார்கள். கருப்பு நிறத்தில் மேகம் புனல் வடிவத்தில் சுழன்றுக்கொண்டே தரையை நோக்கி வந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன.

    Advertisement

    இதை 'டொர்னடோ' என்று சொல்வார்கள். அமெரிக்காவில் இப்படி அடிக்கடி நடக்கும். இந்த புனல் வடிவ மேகம் தரையை தொடும் இடத்தில் ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் இருந்தால் மொத்தமும் காலி.. ஆனால் தூத்துக்குடியில் அவ்வளவு பலம் வாய்ந்த டொர்னடோ வீசவில்லை. அந்த வகையில் மக்கள் பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பியிருக்கின்றனர்.

    இந்தியாவக்கு இந்த டொர்னடோ புயல் புதுசு என்று வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இருந்தாலும் மேற்கு வங்கம், ஒடிசாவில் ஒன்றிரண்டு முறை இதுபோன்ற நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றன. தூத்துக்குடியில் இதற்கு முன்னர் இப்படி நடந்தது கிடையாது. இதுதான் முதல் முறை மட்டுமல்லாது.. இது அரிதான நிகழ்வு என்றும் கூறுகிறார்கள்.

    Advertisement

    ஏன் டொர்னடோ உருவாகிறது?

    ரொம்ப சிம்பிள்.. வெயில் காலத்துல, தரையில் இருக்கும் சூடான காற்று மேலே போகும்போது, வானத்துல குளிர்ந்த மேகங்கள் இருந்தால், இப்படி நடக்கும். ரெண்டு காற்றும் ஒன்றோடு ஒன்று மோதும்போது சாரை பாம்புகள் மாதிரி சுத்திக்கிட்டே வானத்திலிருந்து கீழே வரும். தூத்துக்குடியில் இதுதான் நடந்திருக்கிறது.

    தூத்துக்குடி கடலோர மாவட்டம் என்பதால், கடலிலிருந்து ஈரமான காற்று வரும். அதேபோல தரைப்பகுதியில் இருக்கும் சூடான காற்றும் மேலே போகிறது என்று வானிலை ஆய்வாளர்கள் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.

    பார்க்க நல்லா இருந்தாலும், மொட்டை மாடியிலிருந்தோ, திறந்த வெளியிலிருந்து இதை பார்க்க வேண்டாம். உடனடியாக கான்கிரீட் கட்டிடங்களுக்குள் செல்வது பாதுகாப்பானது.

    English Summary

    Tornado Spotted in Thoothukudi: There has been a significant shift in weather conditions across Tamil Nadu. Amidst this, a whirlwind descended from the sky and touched the ground in Thoothukudi today. Local residents had never witnessed such an unusual phenomenon before. Let’s take a look at what happened.