தூத்துக்குடி: தவெக ஆட்சிக்கு வந்து 2 மாதங்களாகிவிட்டன. சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகமாக உள்ளது. கொலை, கொள்ளை, போதை பொருள், பாலியல் குற்றங்கள், காவல்துறை கஸ்டடி மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் திமுகவினரை கைது நடவடிக்கையும் அரங்கேறி வருகிறது. தூத்துக்குடி எம்எல்ஏ மார்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் சாலையில் இறங்கி போராடினார்கள். உடல்நலத்தில் பாதிப்புள்ள மார்கண்டேயனை கொடுமை செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் முதலமைச்சர் விஜயை மிரட்டும் தொனியில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். அப்போது முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "காலையில் அவரை கைது செய்து அழைத்து வந்தனர். தற்போது அவர் என்ன நிலையில் இருக்கிறார் என தெரியவில்லை. அவர் உதவியாளரை கூட பார்க்கவிடவில்லை. அவர் ஏற்கனவே சுகம் இல்லாத மனிதர் லாக்கப் டெத் எதுவும் ஆகிடக்கூடாது.
அவருக்கு சுகர், பிரஸர், முதுகு வலி எல்லா பிரச்சனைகளும் இருக்கிறது. அவர் கையில் போன் கூட கொடுக்கவில்லை. வழக்கறிஞரையும் பார்க்க விடவில்லை. அவரை அடக்கி வைத்து இப்படி செய்கிறார்கள். போலீஸ் அராஜகம் செய்கிறது. எங்கோ மேலிருந்து உத்தரவு வந்தால் தான் விடுவார்கள் போல. வழக்கு அல்லது கைது குறித்து எம்எல்ஏவுக்கு எந்த நோட்டீஸ் கொடுக்காமல் அழைத்து வந்துள்ளனர். எஸ்.பி.யை பார்க்க கூட அனுமதிப்பதில்லை. மேலே இருந்து உத்தரவு வந்து கொண்டே இருப்பது தெரிகிறது. சட்டத்தை பின்பற்றாமல் நடந்துள்ளனர். ஸ்ரீகுண்டம் எம்எல்ஏ மீது பாலியல் வன்கொடுமை புகார் உள்ளது. இதுவரை விசாரிக்கவில்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை. அவங்களுக்கு வந்த ரத்தம். எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா. தவெக என்றால் ஒன்றும் செய்ய மாட்டார்கள். திமுக என்றால் மட்டும் கைது செய்வார்கள். எங்கள் மீது மட்டும் அடக்குமுறை ஏவுவார்களா. போலீஸ் அராஜகம் ஒழிக. ஸ்ரீகுண்டம் எம்எல்ஏவை ஏன் கைது செய்யவில்லை. தூத்துக்குடி பொருட்காட்சியில் தகராறு செய்த தவெகவை கைது செய்யவில்லை. எல்லோருக்கும் ஒரே அரசியலமைப்பு சட்டம் தான்" என்றார். திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இப்போது மந்திரியாக உள்ள ஆதவ் அர்ஜுனா எங்கள் தலைவரை முட்டாள் முதலமைச்சர் என்று கூறினார். அன்றைக்கு நாங்கள் கைது செய்யவில்லை. கரூரில் 42 பேர் இறந்தபோது, ஓடிசென்று திருச்சி விமானத்தில் ஏறினாரோ அப்போது கைது செய்தோமா. ஒரு சாதாரண பேச்சுக்கு நோட்டீஸ் கொடுக்காமல், விசாரிக்காமல் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் காலை 6 மணிக்கே சென்று கைது செய்துள்ளார்கள் என்றால் இது நாடா. காடா. அதிகபட்சம் 4 மாதங்கள் தான் இந்த ஆட்சி இருக்கும். இது ரொம்ப நாள் ஓடாது. அதுவரை தான் காவல்துறையினர் ஆட முடியும். என்னை இடுப்பை பிடித்து இழுத்த காவல்துறை தான், என்னை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய சொன்னார். அந்த டிஎஸ்பி தான் எல்லாமே சொன்னார். கவர்னர் விசாரணை நடத்தினாலும் நான் பகிரங்கமாக சொல்வேன். 13 பேரை சுட்டு கொன்ற போது கூட இப்படி அராஜகம் செய்யவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம்" என்றார்.எல்லா பிரச்சனையும் இருக்கு
இது நாடா காடா