உடைஞ்சது திருமங்கலம் பார்முலா.. தவெக மட்டுமே தூயசக்தி.. கடம்பூர் ராஜூ சொல்லும் காரணம்

  • தூத்துக்குடி: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளையும் வைத்திருந்து அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. திமுக இண்டாம் இடத்தை பிடித்தது. இந்நிலையில் எம்ஜிஆருக்கு பிறகு கட்சி தொடங்கிய முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்தவர் விஜய். திருமங்கலம் பார்முலாவை உடைத்து தவெக வெற்றி பெற்றுள்ளது. தவெக தான் தூய்மையான சக்தி என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

    Advertisement

    தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகியுமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "2009 திருமங்கலம் இடைத்தேர்தல் நடந்தது. அன்றைக்கு தேர்தலில் மக்களை சந்திப்பதில் லஞ்ச லாவண்யம் தலையெடுத்துவிட்டது. திருமங்கலம் பார்முலாவை நாட்டிற்கு அடையாளம் காட்டியது திமுக. அதற்கு பிறகு வேறு வழியில்லாமல், எத்தனை கட்சிகள் மக்களை சந்தித்தோம் என அனைவருக்கும் தெரியும்.

    Advertisement

    இடைத்தேர்தல் பார்முலா மாற்றம்

    சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டை திருடாமல், தவெக நேர்மையாக சந்தித்து வெற்றி பெற்றது. இது ஒன்றே தூயசக்தி என்பதற்கு அடையாளம். இடைத்தேர்தல் என்றாலே மக்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை கண்கூடாக பார்த்துள்ளோம். இடைத்தேர்தல் என்றாலே தீபவாளி தான். அதை பொங்கல் தான் என்கிற மனநிலையில் தேர்தலை எதிர்கொள்வார்கள். இந்த இடைத்தேர்தலில் கூட வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் பணம் கொடுக்காமல் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற தமிழக அரசியல் வரலாற்றில் தவெக மட்டும் தான்.

    Advertisement

    தவெக தூய சக்தி என்பதற்கு இந்த தேர்தலே சாட்சி. பொருளாதார வீழ்ச்சி காரணமாக விலைவாசி உயரும். பொருளாதாரம் சீரடையும்போது விலை குறையும். இது தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உலகளவில் இதே நிலை தான. விலை வாசியை கட்டுப்படுத்த முதலமைச்சர் ஒரு குழு அமைத்துள்ளார். விரைவில் விலைவாசி கட்டுப்படுத்தப்படும். முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கூட தேர்தலில் வெற்றி பெறவில்லை. உதயநிதி எதிர்க்கட்சி தலைவரானார்.

    திமுகவின் ரத்தத்தில்

    காவிரி பிரச்சனைக்காக தஞ்சாவூர் சென்றுவிட்டு, காவிரியை பற்றியும் விவசாயிகளை பற்றி பேசாமல் பெண்களை பற்றி பேசினார். அதற்காக தான் அவர் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டார். அதையும் தாண்டி முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தான் 50 ஆண்டுகள் பொது வாழ்வில் இருந்தேன். மிசாவை சந்தித்தவன் என்கிறார். 5 ஆண்டுகள் தமிழக முதலமைச்சராக இருந்தவர், தாராபுரத்தில் பெண் வேட்பாளரை உருவ கேலி செய்கிறார்.

    Advertisement

    திமுக காலம் காலமாக இதைத்தான் செய்கிறது. புரட்சி தலைவி அம்மாவை இப்படித்தான் இழிவுபடுத்தினார்கள். சட்டமன்றத்தில் பெண் என்றும், எதிர்க்கட்சி தலைவர் என்றும் பாராமல் புடவையை பிடித்து, தலைமுடியை பிடித்து இழுத்தனர். அவமானப்படுத்தி தாக்குதல் நடத்தினர். இது திமுகவின் ரத்தத்தில் ஊறிப்போன குணம். இதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள். மக்களும் அவர்கள் மாற வேண்டுமென தீர்ப்பளித்தும் திருந்தவில்லை" என்றார்.

    English Summary

    TVK Kadambur Raju said, CM Vijay broke Thirumangalam formula in the by election. TVK is the clean party in Tamilnadu.