DMK- BJP: திமுக- பாஜக கூட்டணி! திரைமறைவில் ரகசிய டீலிங்! வைகோ சொன்ன பகீர் சம்பவம்

  • தூத்துக்குடி: திரைமறைவில் ரகசியமான ஒரு உடன்பாட்டுக்கு ஏற்பாடு நடக்கிறது என நம்புவதாக, திமுக- பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதில் அளித்துள்ளார். இது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தூத்துக்குடி விமான நிலையத்தில் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜக- திமுக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதாக தவெக அமைச்சர்கள் குற்றம்சாட்டுகிறார்களே , அது குறித்து உங்கள் கருத்து என்ன? என கேட்டனர்.

    Advertisement

    அதற்கு வைகோ, திரைமறைவில் ரகசியமான ஒரு உடன்பாட்டுக்கு ஏற்பாடு நடக்கிறது என நான் நம்புகிறேன் என்றார்.

    சட்டசபை உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது குறித்த கேள்விக்கு, வைகோ பதிலளிக்கையில், "எம்எல்ஏக்கள் நிறைய பேருக்கு கார் கிடையாது. அதற்கான வசதியும் அவர்களிடம் கிடையாது. வாகனம் கொடுப்பதில் தவறில்லை. விருப்பமில்லாதவர்கள் வேண்டாம் என மறுத்துக் கொள்ளட்டும், இல்லாதவர்கள் வாங்கிக் கொள்ளட்டும். இதை நல்ல நடவடிக்கையாகத்தான் நான் பார்க்கிறேன் என்றார்.

    தொடர்ந்து வைகோ பேசுகையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வாக்குகள் எண்ணப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் என்னை சந்தித்த போது, தேர்தல் முடிவுகள் அதிர்ச்சித்தரத்தக்க ஆச்சரியங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என நான் கூறினேன்.

    Advertisement

    அது போல் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் மகத்தான வெற்றி பெற்று ஜோசப் விஜய் முதல்வராகியுள்ளார். 100 நாட்கள் ஆகிவிட்டது, தவெக என்ன சாதித்துவிட்டது என கடந்த ஆட்சியாளர்கள் தரப்பில் இருந்து கேட்கிறார்கள்.

    இதுவரை தலைவிரித்தாடிய லஞ்சத்தை ஊழலை வேருடன் சாய்ப்போம் என சொன்னதை விஜய் நிரூபித்து காட்டியிருக்கிறார். இதுவரை பதிவுத் துறை, ஆசிரியர், நர்ஸ் இடமாற்றம், வீடு கட்ட, நிறுவனங்கள் அமைக்க என ஒவ்வொன்றுக்கும் லட்சம் முதல் கோடி வரை புரண்ட ஊழல் களையப்பட்டிருக்கிறது.

    இதைவிட புதிய அரசால் என்ன சாதிக்க முடியும். இதுவரை நிர்வாகத்திற்கு சீர்கேடாக இருந்த ஊழலை ஒழிப்பேன், தயவு தாட்சண்யம் இல்லாமல் நான் நடவடிக்கை எடுப்பேன் என விஜய் தெரிவித்திருந்தார். அதை மெய்பித்து காட்டிவிட்டார் என்றுதான் நான் கருதுகிறேன்.

    Advertisement

    முன்பு மாதிரி அரசு அலுவலகங்களில் கப்பம் கட்ட வேண்டியது இல்லை என்ற மகிழ்ச்சியில் பொதுமக்கள் இருக்கிறார்கள். அது மிகப் பெரிய சாதனையாக கருதுகிறேன்.

    சட்டசபையில் விஜய் ஆற்றிய உரையை கேட்டேன். அதில் ஒரு முக்கிய குற்றச்சாட்டை வைக்கிறார். "அண்ணா மறைவுக்கு பிறகு 1969 இல் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றவுடன், அந்த காலகட்டத்தில்தான் 4 புதிய அணைகளை கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே கட்டியது. அதை திமுக அரசு தடுக்கவில்லை, தடுப்பதற்கான குரலையும் எழுப்பவில்லை.

    மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து 2014 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்கு ஆயிரகணக்கானவர்களுடன் சென்று போராட்டம் நடத்தினேன். "தஞ்சை டெல்டா பகுதிகளிலும் ஊர் ஊராக சென்று பேரிடி தமிழகத்தின் தலையில் விழ போகிறது, தஞ்சை தரணி பஞ்ச பிரதேசமாக போகிறது". இவ்வளவு பெரிய ஆபத்தை எதிர்க்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரு மாத காலம் கட்சி கொடி கட்டாமல் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்தேன்.

    Advertisement

    "தொடக்கத்தில் அந்த 4 அணைகளை கர்நாடகா அரசு கட்ட முயன்ற போதே கருணாநிதி தடுத்து நிறுத்தாதது ஏன்" என பெயரை குறிப்பிடாமல், யாருடயை ஆட்சி என்பதையும் குறிப்பிடாமல் முதல்வர் விஜய் அடுக்கடுக்கான கேள்விகளை சட்டசபையில் எழுப்பியதை நான் பார்த்தேன். இந்த கேள்விகளுக்கு திமுகவால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் அந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பது திமுக. இவ்வாறு வைகோ பேசியிருந்தார்.

    மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் தேநீர் விருந்துக்கு திமுக எம்பி கனிமொழி சென்றது, பாஜகவுடன் இணக்கமாக இருப்பது இவற்றை வைத்து திமுக- பாஜக ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக தவெக அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். அந்த குற்றச்சாட்டு உண்மை என வைகோவும் தெரிவித்திருக்கிறார்.

    English Summary

    MDMK General Secretary Vaiko says that i strongly believe there may be secret dealing between DMK and BJP in behind the screen