திருச்செந்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு மறக்க முடியாத ஏமாற்றம்.. பாராட்டப்படும் விவசாயி

  • திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பில் வசிக்கும் விவசாயி மதிபாலுக்கு 86 சென்ட் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் அவர் அரசு மானியம் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு விரும்பி உள்ளார். அதற்கு சிறு, குறு விவசாய சான்றிதழ் மற்றும் நில அடங்கல் சான்று பெறுவது அவசியம் ஆகும். அதற்காக காயாமொழி கிராம நிர்வாக அலுவலர் தனசேகரிடம் அணுகி உள்ளார். அந்த விஏஓ தற்போது 2500 லஞ்சம் வாங்கியதாக கைதாகி உள்ளார்.

    Advertisement

    விவசாயிகள், அரசின் மானியங்கள் பெறுவதற்கு சான்றிதழ்கள் அவசியம் ஆகும். ஆனால் அந்த சான்றிதழ்களை பெறுவதற்கு எதற்குமே லஞ்சம் தர வேண்டிய தேவையில்லை. ஆனால் மானியமாக அரசு ஆயிரக்கணக்கில் பணம் தருவதால், அதில் கணிசமாக லஞ்சம் தந்தால் தான் அந்த சான்றிதழ் தருவதாக சில அரசு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு உள்ளது. இப்படியான சூழலை எதிர்கொள்ளும் ஏழை எளிய விவசாயிகள் லஞ்சம் கொடுத்தாவது சான்றிதழ் வாங்கிவிடலாம் என நினைக்கிறார்கள். 100ல் ஒருவர் தான் லஞ்சம் தரக்கூடாது, அவரை புகார் அளித்து மாட்டிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியான சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துள்ளது.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிக்குடியிருப்பு பகுதியில் 56 வயதாகும் மதிபால் என்பவர் வசித்து வருகிறார்.. விவசாயியான இவர், தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் உள்ள 86 செண்ட் நிலத்தில் தென்னை மற்றும் எலுமிச்சை சாகுபடி செய்து வருகிறார். இதில் அரசு மானியம் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு சிறு, குறு விவசாய சான்றிதழ் மற்றும் நில அடங்கல் சான்று பெறுவது குறித்து காயாமொழி கிராம நிர்வாக அலுவலர் தனசேகரிடம் அணுகி உள்ளார். அவர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி கூறினார்.

    அதன்படி சிறு, குறு விவசாய சான்றிதழ் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறப்பட்டது. ஆனால் நில அடங்கல் சான்றில் கையெழுத்திட்டு வழங்குவதற்கு மதிபாலிடம், கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் ரூ.2,500 லஞ்சமாக கேட்டதாக சொல்லப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத மதிபால் இதுகுறித்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    Advertisement

    உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.2,500-ஐ மதிபாலிடம் வழங்கி, அதை தனசேகரிடம் கொடுக்கும்படி கூறினர். அதன்படி நேற்று பகலில் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த தனசேகரிடம் பணத்தை மதிபால் கொடுத்தார். அதை அவர் வாங்கிய போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் தனசேகரை கையும், களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English Summary

    tuticorin : Village Administrative Officer (vao) arrested near Tiruchendur for accepting a bribe of ₹2,500 from a farmer