தூத்துக்குடி வரும் குடியரசு துணை தலைவர்! மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு! ட்ரோன்கள் பறக்கத் தடை

  • தூத்துக்குடி: குடியரசுத் துணை தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று தூத்துக்குடிக்கு வருகை தர இருக்கும் நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணை தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோர் இன்று காலை தூத்துக்குடி வருகின்றார். விமான மூலம் தூத்துக்குடி வரும் அவர்களுக்கு அங்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்ப்பளிப்பார்கள்.

    Advertisement

    தொடர்ந்து வஉசி கல்லூரி பவள விழாவில் கலந்து கொள்ளும் குடியரசுத் துணைத் தலைவர், நண்பகலில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் 105வது ஆண்டு விழாவில் பங்கே இருக்கிறார். ஆளுநர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    விமான நிலையம், வ.உ.சி கல்லூரி மற்றும் மெர்கன்டைல் வங்கி நிகழ்வு நடக்கும் பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குடியரசுத் துணைத் தலைவர் வருகையை முன்னிட்டு மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு வகுப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி திருநாவுக்கரசு, எஸ்பி சிவ பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் விஸு மகாஜனும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    English Summary

    Vice President CP Radhakrishnan and Tamil Nadu Governor visit Thoothukudi today, prompting extensive police security and a district-wide drone ban.