டெல்லி போனாலும் விஜய் மீதுதான் போகஸ்..நாளைக்கு டெல்லியே அவரோடது தான்! அமைச்சர் ஸ்ரீநாத் பாடிய பாட்டு

  • தூத்துக்குடி: நம்ம தளபதி ( முதல்வர் விஜய்) எங்கு சென்றாலும் அங்கு போகஸ் அவர் மீது தான் இருக்கும். அவர் டெல்லிக்கு போனாலும் போகஸ் இருக்கும். நாளைக்கு அந்த டெல்லியே கூட அவருடையதாகக் கூட இருக்கலாம் என்று தூத்துக்குடியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் பேசியுள்ளார். மேலும், இந்த ஆட்சி 100 நாள் தாண்டாது, 50 நாள் தாண்டாகாது என்று சொல்கிறார்கள்.. நான் உறுதியாக சொல்கிறேன் நிரந்தர முதலமைச்சர் விஜய் தான் என்றும் கூறியுள்ளார்.

    Advertisement

    தூத்துக்குடி சிதம்பர நகரில் தமிழக வெற்றி கழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஸ்ரீநாத், பத்து நாள், 15 நாள் தாண்டுமா இவர்களது ஆட்சி என்று விமர்சனம் செய்தனர்.

    Advertisement

    இது என்ன தமிழ் படமா? இது பத்து நாள் தான் ஓடும், ஐம்பது நாள் தான் ஓடும் என்று சொல்வதற்கு. எல்லாம் பயம் பொறாமை. வரலாற்றிலேயே ஒரு கட்சியை ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த வரலாறு எங்கு நடந்துள்ளது எனக்கு தெரியவில்லை சொல்லுங்கள்.

    அமைச்சர் ஸ்ரீநாத்

    இப்படி ஒரு வரலாறை படைத்தவர் யார்? தளபதியை தவிர வேறு யாரால் முடியும். மக்கள் மீது வைத்துள்ள அன்பின் காரணமாக எல்லாவற்றையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். எவ்வளவோ பேர் அவரை தடுத்தார்கள். இன்னும் நேரம் இருக்கிறது. இன்னும் சம்பாதித்து பெயர் புகழோடு அதற்குப் பிறகு ஏற்படும் வெற்றிடத்தின் போது போய் சாதிக்கலாம் என்றனர்.

    Advertisement

    தவெக அரசு

    என்னால் இந்த தலைமுறையை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. இந்த தலைமுறையை சீரழிக்கின்றனர். அடுத்த தலைமுறையினர் சீரழிய விடக் கூடாது நான் வரேன் என்றார். நமக்காக நம்முடைய மக்களுக்காக நமது குழந்தைகளுக்காக அவர்களின் நலனுக்காக வந்துள்ளார். இன்று இவர்கள் சொல்கின்றனர் 100 நாள் தாண்டாது 50 நாள் தாண்டாகாது என்று.

    முதலமைச்சர் விஜய்

    நான் உறுதியாக சொல்கிறேன் நிரந்தர முதலமைச்சர் விஜய் தான். அவராக பார்த்து விட்டு போங்கடா நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கிறேன் என்று நினைத்தால் தான் உங்களுக்கு இந்த பதவி எல்லாம் கிடைக்கும். ஒரு பேமசான திரைப்படத்தில் பேமஸான டயலாக் இருக்கிறது. இங்கே என்ன சொல்லுது. ஜெஸ்ஸி, ஜெஸ்ஸி என்று சொல்லுதா? அதேபோன்று தமிழ்நாட்டு மக்கள் மனதில் இங்கு என்ன சொல்லுது என்றால் தளபதி தளபதி என்று சொல்லும்.

    Advertisement

    நிரந்தர முதல்வர்

    அதனால் தான் அவர் நிரந்தர முதல்வர். இன்னும் நான் சாதிக்க நிறைய இருக்கிறது பார்ப்போம். இப்போது அவர் தமிழ் சினிமாவில் இல்லை என்றாலும் கூட இன்று சட்டசபையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார். டிஆர்பி ரேட்டிங் ஹைட் . எங்களிடத்தில் மக்களே சொல்கின்றனர். நாங்கள் இப்போது சீரியல் பார்ப்பது கிடையாது .சட்டமன்றம் நேரலையை மட்டும் தான் பார்க்கிறோம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சட்டமன்றம் வைக்க மாட்டார்களா? என்று ஆசையாக இருக்கிறது என்கின்றனர்.

    டெல்லி அரசியல்

    நம்ம தளபதி எங்கு சென்றாலும் அங்கு அவர் மீது தான் போகஸ் இருக்கும். அவர் டெல்லிக்கு போனாலும் போகஸ் இருக்கும். நாளைக்கு அந்த டெல்லியே கூட அவருக்காக இருக்கலாம். நான் எப்போதும் அவருடன் இருப்பேன் என்று தெரிவித்துவிட்டு "ஒரு போதும் உன்னை நானும் விடமாட்டேன். சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாஸ்டா" என்ற பாடலை பாடினார்.

    English Summary

    Minister Srinath praises Vijay’s leadership, saying he will remain Tamil Nadu Chief Minister and could dominate Delhi politics too.