விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி.. தூத்துக்குடி கோர்ட் உத்தரவு

  • தூத்துக்குடி: தமிழக முதல்வர் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கேட்டு மாக்கண்டேயன் தரப்பில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதே போன்று மார்க்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி சுமதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    Advertisement

    தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்யை மிரட்டும் தொனியில் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கடந்த சனிக்கிழமை கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன், மானங்கெட்ட தமிழ்நாட்டினுடைய முதல் அமைச்சர்.. உன்னைய சட்டமன்றத்திற்குள் வைத்து பார்த்துகுறோம்..

    Advertisement


    விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ

    நாங்க என்ன கோமாளி பயல்கள்னு நினைக்கிறீங்களா.. சட்டமன்றத்தை பூட்டுவாராம்.. பூட்டினால் எலும்பு இருக்காது உடைத்துவிட்டுதான் உன்னை அனுப்பி விடுவோம். இவ்வளவு ஒரு கேவலமான ஒரு முதல்வரை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய வரலாறே பெற்றது இல்லை" என்று பேசினார். மார்க்கண்டேயனின் இந்த பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

    மார்க்கண்டேயனுக்கு எதிராக காவல் நிலையத்தில் தவெகவினர் புகாரளித்தனர். இதைத்தொடர்ந்து விஜய் குறித்து அவதூறாக பேசிய மார்க்கண்டேயன் மீது புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 351 (3)-கொலை மிரட்டல் விடுத்தல், 352- அவதூறாக பேசுதல், 353 (2)- மக்களிடையே பகை வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவது ஆகிய 3 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்தனர்.

    Advertisement

    ஜாமீன் மனு தள்ளுபடி

    இதையடுத்து, நேற்று முன் தினம் காலை, விளாத்திகுளம் எம்.எல்.ஏ அவரது வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார்.. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறைச்சாலையில், மார்க்கண்டேயன் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே, தனக்கு ஜாமீன் அளிக்கக்கோரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுமதி தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மார்க்கண்டேயன் தொடர்ந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால், மார்க்கண்டேயனுக்கு இன்று ஜாமீன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த திமுகவினர் ஏமாற்றமடைந்தனர்.

    Advertisement

    இதே போன்று மார்க்கண்டேயனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவையும் நீதிபதி சுமதி தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நேரில் சந்தித்த கனிமொழி

    முன்னதாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை திமுக எம்பி கனிமொழி நேற்று நேரில் சந்தித்து பேசி இருந்தார். பின்னர் செதியாளர்களிடம் பேசிய கனிமொழி, திமுகவினருக்கு சிறை புதிது அல்ல. பொய் வழக்கு மற்றும் கைதுக்கு திமுகவினர் அஞ்ச மாட்டார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் நிகழ்கிறன" என்றார்.

    English Summary

    Vilathikulam DMK MLA Markandeyan, who spoke in a threatening tone towards Chief Minister Vijay, has been remanded to judicial custody for 15 days. While his representatives have filed a bail petition, the hearing for this plea has been listed online for today at the Thoothukudi court. Consequently, there is anticipation among DMK members regarding whether Markandeyan will be granted bail.