விளாத்திகுளம் வட்டாட்சியர் டிரைவர் வீட்டில் ஒரே கூட்டம்.. 16 சவரன் தங்கம்? தூத்துக்குடி சுசிலா ஷாக்

  • தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர், குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.. பிறகு மாலையில் திரும்பி வந்தபோது அதிர்ச்சியடைந்தார். வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த தங்க நகைகளும் மாயமாகி இருந்தன... கொஞ்ச நேரத்திற்குள் இப்படியொரு சம்பவமா? என்று விளாத்திகுளம் மக்கள் கலங்கி கிடக்கிறார்கள்.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அம்பாள்நகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (43). இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இப்போது விளாத்திகுளம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுசீலா (38). கடந்த திங்கள்கிழமை காலையில் சுசீலா வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

    Advertisement

    பீரோவில் 16 சவரன் தங்க நகைகள்

    வேலை முடிந்த பிறகு மாலையில் சுசீலா வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.. உடனே பதறிப்போய் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கே பீரோவில் வைத்திருந்த பொருட்களை பார்த்தபோதுதான் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

    பீரோவில் இருந்த 16 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். வீட்டை பூட்டிவிட்டு சில மணி நேரம் வெளியே சென்ற நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    விளாத்திகுளம் வட்டாட்சியர்

    இதையடுத்து சுசீலா விளாத்திகுளம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். வீட்டின் கதவு எப்படி உடைக்கப்பட்டது, வீட்டுக்குள் மர்ம நபர்கள் எந்த வழியாக நுழைந்தனர் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

    Advertisement

    சுசிலா வெளியில் சென்றுவிட்டு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் இந்த கொள்ளை நடந்துள்ளதால், தெரிந்தவர்கள் யாராவது இதை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது..

    அதேபோல், திருட்டு நடந்த நேரத்தில் அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமாக யாராவது நடமாடினார்களா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்காக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த காட்சிகளை ஆய்வு செய்து, நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ஈரோடு 7 பவுன் திருட்டு

    நேற்றைய தினம்தான், ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதியில், இந்திராணி என்ற என்ற பெண்மணி வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்து பரபரப்பை தந்தது.. பழனிக்கு சென்றிருந்த இந்திராணி, வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது... நேற்றைய தினம் தூத்துக்குடியிலும் 16 சவரன் நகைகள் திருடப்பட்ட சம்பவம், கலக்கத்தை தந்து வருகிறது.

    Advertisement

    தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.

    English Summary

    Vilathikulam Tahsildar Drivers House.. 16 Sovereign Gold Jewellery Stolen? Thoothukudi Susila in Shock