திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!

  • தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு அமைச்சரிடமே லஞ்சம் பெற்ற புகாரில், கோயில் பணியாளர்கள் 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில் இந்த குற்றத்தில் ஈடுபட்ட அர்ச்சகருக்கு, வெறுமென தடை மட்டும் விதித்தது ஏன்? என்று கேள்விகள் எழுந்தன. இதற்கு அமைச்சர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாட்டுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று தொடர்ந்து புகார்கள் எழுந்திருந்தன.

    Advertisement

    இதனையடுத்து இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திடீரென திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு சென்றிருந்தார். அங்கு, அர்ச்சகர்கள் சிலர் இவரை அணுகி சிறப்பு தரிசனத்திற்கு அழைத்து செல்வதாகவும், அதற்கு ரூ.4000 செலவாகும் என்று சொல்லி, பணம் அனுப்பு 'கூகுள் பே' நம்பரையும் கொடுத்திருக்கிறார்கள். அந்த நம்பருக்கு அமைச்சர் பணம் அனுப்பியிருக்கிறார். அதன் பின்னர்தான் வந்தது அமைச்சர் என்பது ஊழியர்களுக்கு தெரிந்திருக்கிறது.

    என்னிடமே வசூல் வேட்டையா? என்று டென்ஷனான அமைச்சர் உடனடியாக ஆய்வுக்கு உத்தரவிட்டார். சுமார் 2 மணி நேரம் ஆய்வு நடந்தது. கோயிலில் முடி காணிக்கை செலுத்தும் இடத்திலும் இதேபோல பக்தர்களிடம் பணம் பெறுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து கோயிலின் இணை ஆணையர் வரவழைக்கப்பட்டு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்றது.

    Advertisement

    பின்னர் லஞ்சம் பெற்ற புகாரில், 4 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல லஞ்ச புகாரில் சிக்கிய அர்ச்சகருக்கு கோயிலுக்கு வர தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியது. லஞ்சம் பெற்றதாக கடைநிலை ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமைச்சர், சாதி பார்த்து அர்ச்சருக்கு மட்டும் வலிக்காமல் தண்டனை கொடுத்திருக்கிறார் என்று பலரும் விமர்சிக்க தொடங்கினர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது அர்ச்சகர் ஊதியம் வாங்கும் ஊழியராக இல்லாமல், தன்னார்வலராக இருக்கிறார் என்பதால்தான் அவருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    English Summary

    Tiruchendur: Four temple employees at the Arulmigu Subramaniya Swamy Temple in Tiruchendur have been dismissed from service following complaints that they accepted bribes—directly from a government minister—in exchange for special *darshan*. In light of this, questions arose as to why the temple priest involved in this misconduct was merely subjected to a ban, rather than facing a more severe penalty. The Minister's office has since issued a clarification regarding this matter.