வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் கோழியை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோழியை விழுங்கிய பிறகு நகர முடியாமல் இருந்த பாம்பை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடிக்க ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் பரதராமி அருகே உள்ள வி.ராமாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கங்காதரன்.. 50 வயதாகும் இவர் ஒரு விவசாயி ஆவார். எனவே கங்காதரனுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்கு பசு மாடுகளுக்கு உணவாக பயன்படுத்தப்படும் திணை பயிரை அறுவடை செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த நிலத்தில் ஒரு மலைப்பாம்பு கோழியை விழுங்கிவிட்டு நகர முடியாமல் இருந்ததை அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பார்த்துள்ளனர். சாதாரணமாகவே மலைப்பாம்பை பார்த்தால் பலரும் பயப்படுவார்கள். அதுவும் சுமார் 12 அடி நீளத்தில் இருந்த பாம்பு கோழியை விழுங்கிய நிலையில் கிடந்ததை பார்த்ததும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அந்த இடத்தை விட்டு தெறித்து ஓடினார்கள்.. பிறகு இதுகுறித்து குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனச்சரக அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால், அங்கு வந்ததும் உடனடியாக பாம்பை பிடித்துவிட முடியவில்லை. கோழியை விழுங்கிய நிலையில் இருந்த மலைப்பாம்பை பிடிக்க முயற்சி செய்தால், அது விழுங்கிய கோழியை கக்கிவிட்டு ஆக்ரோஷமாக தாக்கக்கூடும் என்பதால் வனத்துறையினர் காத்திருந்தனர். இதனால் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அந்த இடத்தில் காத்திருந்தனர். பிறகு மலைப்பாம்பு அங்கிருந்து சிறிது தூரம் நகர்ந்து சென்றபோது, வனத்துறையினர் அதை லாவகமாக பிடித்தனர். சுமார் 12 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர், அருகில் உள்ள அனுப்புக்காட்டுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர். இதையடுத்து விவசாய நிலத்தில் ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது. கோழியை விழுங்கியதால் நகர முடியாமல் இருந்த மலைப்பாம்பை பிடிக்க வனத்துறையினர் நீண்ட நேரம் காத்திருந்த சம்பவம் அந்தப் பகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படித்தான் கடந்த ஒரு வாரம் முன்பு, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நரிக்கல்பதி பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்த ராட்சத மலைப்பாம்பு, கோழிக்கூட்டில் இருந்த 5 கோழிகளை அடுத்தடுத்து விழுங்கியது. கோழிகளை விழுங்கியதால் நகர முடியாமல் தவித்த மலைப்பாம்பை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு விரைந்து வந்த வனத்துறையினர், நகர முடியாமல் இருந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.கோழியை விழுங்கிய மலைப்பாம்பு
12 அடி நீளமுள்ள பாம்பு
கோவை - 5 கோழிகள்
பின்னர் அந்த மலைப்பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.. இந்த சம்பவமும் அப்போது அந்த பகுதி மக்களை வெலவெலக்க வைத்தது நினைவிருக்கலாம்...!!