ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட்

  • ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் வீட்டில் உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது பீரோவில் இருந்த 21 சவரன் தங்க நகை பணம் 2 ஏக்கர் நிலம் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. வீட்டின் கதவு பூட்டு பீரோ லாக்கர் உடைக்காமலேயே நகை பணம் நிலபத்திரம் காணாமல் போய் இருப்பதாக வந்திருக்கும் புகார் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Advertisement

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த களத்தூர் கிராம பகுதியை சேர்ந்த 52 வயதாகும் பழன என்ற விவசாயி வசித்து வருகிறார். இவரது மனைவி பராசக்தி(45) இவர்களுக்கு கோபி கிருஷ்ணன்(26) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்று விட்டு குடும்பத்தினர் வீடு திரும்பி உள்ளனர். நேற்று இரவு பழனி மற்றும் பராசக்தி ஆகிய இருவரும் வீட்டின் நுழைவாயில் வராண்டாவில் உறங்கியுள்ளனர் இவர்களது மகன் கோபி கிருஷ்ணன் வீட்டில் மேலே இருக்கும் அறையில் உறங்கியதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    இதன் காரணமாக மறுநாள் காலை குடும்ப செலவிற்காக பணத்தை எடுப்பதற்காக பராசக்தி பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 21 சவரன் தங்க நகை 7 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் 2 ஏக்கர் நிலத்திற்கான பத்திரம் ஆகியவை பீரோவில் இருந்து திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது தொடர்பாக அவளுர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவு மற்றும் பீரோ போன்றவை உடைக்கப்படாமல் இருக்கும் நிலையில் நகை பணம் மற்றும் நில பத்திரம் காணாமல் போயிருப்பதாக புகார் தெரிவித்திருக்கும் நிலையில் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Advertisement

    ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மருத்துவமனையில் ஆய்வு

    மருத்துவர்கள் தங்களுடைய பணிகளை அர்பணிப்புடன் செய்ய வேண்டும் நோயாளிகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று அதிரடியாக களத்தில் இறங்கி அரசு மருத்துவமனையில் ஆய்வை நடத்தி உள்ளார் ஆட்சியர் பிரியா

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ராணிப்பேட்டையில் 7-வது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பிரியா திடீரென அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்..

    அப்போது ஆய்வில் மருத்துவமனையில் தலைமை மருத்துவர் அறை, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் வருகை பதிவேடு, பயோமெட்ரிக் வருகை பதிவேடினை ஆய்வு செய்து வருகை புரியாதவர்கள் குறித்தும் விடுமுறை எடுத்தவர்கள் குறித்தும் கேட்டறிந்தார்
    தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்கள், நோயாளி பிரிவு மற்றும் உள் நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு அறுவை சிகிச்சைகள் அதிகமாக நடைபெறுவது குறித்து அதற்கான காரணங்களை கேட்டறிந்தார்..

    Advertisement

    இதனைத்தொடர்ந்து குழந்தைகள் நல பிரிவு, ஆண்கள், பெண்கள் உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, ரத்த வங்கி,சிடி ஸ்கேன் மையம், பிசியோதெரபி, டயாலிசிஸ் மையம், சித்தா பிரிவு, மனநல பிரிவு, சமையல் கூடம், குழந்தைகள் மன வளர்ச்சி குறைப்பாட்டு சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, தொற்றா நோய் பரிசோதனை பிரிவு, மருந்தகம், எலும்பு சிகிச்சை பிரிவு, ENT, கண் சிகிச்சை பிரிவு போன்ற அனைத்து சிகிச்சை மையங்களையும், அதைப்போல் மருத்துவமனை வளாகம் முழுவதும் சுற்றிப் பார்த்து பல்வேறு அறிவுரைகளை வழங்கியதோடு நோயாளிகளிடம் சிகிச்சைகள் வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார் உடன் மாவட்ட மருத்துவமனை உஷாநந்தினி உட்பட மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் என பலர் உடனிருந்தனர்.

    English Summary

    21 Sovereigns of Gold and Land Deeds for 2 Acres Stolen from Ranipet House—Without Breaking Open the Bureau.