ஆம்பூரில் ஏரி வேலைக்கு போன ருக்மணி! ரூ.2.79 கோடி ஜிஎஸ்டி பாக்கி? திருப்பத்தூர் வணிகவரி துறை நோட்டீஸ்

  • திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த ஏழைப் பெண் ருக்மணி, கிராமப்புற 125 நாள் வேலைத் திட்டத்தில் ஏரி வேலைக்கு சென்றுள்ளார்.. அந்த பணத்தையும் பெறுவதற்காக வங்கிக்கு நேற்று சென்றுள்ளார்.. ஆனால், ரூ.2.79 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்ததாக கூறி ஆம்பூர் வணிகவரித்துறை ருக்மணியின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளது. இதை கேட்டு ருக்மணி வெலவெலத்து போய்விட்டார்..!!

    Advertisement

    125 நாள் வேலைத் திட்டம் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் விரிவாக்கம்) என்பது கிராமப்புற ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வரை கூலியுடன் வேலைவாய்ப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் திட்டமாகும்.

    Advertisement

    இந்த திட்டத்தின் மூலம் கிராமங்களில் சாலை, குளம், நீர்நிலைகள் சீரமைப்பு, மரநடுகை உள்ளிட்ட பொதுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. திட்டத்தின் முக்கிய நோக்கம் கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்வதுடன், ஊரக கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதாகும்.

    125 நாள் வேலைக்கு போன ஏழைப்பெண்

    இந்த 125 நாள் வேலைத் திட்டம் (VB-G RAM G) நாடு முழுவதும் 2026 ஜூலை 1 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. இது முன்பிருந்த 100 நாள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை, 15 நாட்களுக்குள் ஊதியம், மற்றும் கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டுக்கான கூடுதல் அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

    Advertisement

    இந்த 125 நாள் வேலை திட்டத்தில்தான் ருக்மணி என்ற பெண், தன்னுடைய வாழ்வாதாரத்துக்காக சேர்ந்துள்ளார்.. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த புதூர் பகுதியில் வசித்து வரும் முருகேசன் என்பவரின் மனைவிதான் ருக்மணி. 56 வயதாகும் இவர், 125 நாள் வேலை திட்டத்தில் இணைந்து, ஏரி வேலைகளுக்கு சென்று வந்துள்ளார்.

    ஜிஎஸ்டி வரி 2.80 லட்சம்

    நேற்று வழக்கம்போல் சந்தைக்கோடியூர் பகுதியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றிருக்கிறார். அங்குள்ள அதிகாரிகளிடம் தனது பேங்க் பாஸ்புக்கை தந்து, பணத்தை எடுக்க முயன்றுள்ளார்.. ஆனால் ருக்மணியின் வங்கிக் கணக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருந்தது.

    காரணம், ஆம்பூர் வட்ட வணிகவரித்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து வங்கி நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.

    Advertisement

    அதில் ருக்மணி "ஆர்.எம்.டிரேடர்ஸ்' என்ற பெயரில் பெரிய அளவில் வணிக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார், அந்த தொழில் நிறுவனத்தின் மூலம் அரசுக்குச் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டியை செலுத்தாமல், சுமார் 2 கோடியே 79 லட்சத்து 19 ஆயிரத்து 420 ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளார். எனவே ருக்மணியின் வங்கிக் கணக்கை உடனடியாக முடக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளதாம்.

    நிலைகுலைந்த ருக்மணி

    இந்த விவரத்தை வங்கி அதிகாரிகள் ருக்மணியிடம்படித்து சொல்லவும், நிலை குலைந்து போனார், தான் அப்படிப்பட்ட எந்தவொரு தொழில் நிறுவனத்தையும் நடத்தவில்லை என்றும், ஏரி வேலைக்கு சென்றுதான் தனது வாழ்க்கையைக் கழித்து வருவதாகவும் கண்ணீருடன் வங்கியிலேயே கதறினார்..

    Advertisement

    ஆனாலும், வணிகவரித் துறையின் அதிகாரப்பூர்வக் கடிதம் வந்துள்ளதால் வங்கி அதிகாரிகளால் ருக்மணிக்கு பணத்தை வழங்க முடியாமல் போனது. இதனால், மிகுந்த ஏமாற்றத்துடனும் மனவேதனையுடனும் வீட்டிற்குத் திரும்பி சென்றார் ருக்மணி.

    வரி ஏய்ப்பு மோசடி செய்தது யார்

    கூலி வேலைக்கு செல்லும் ஒரு ஏழைப்பெண்ணின் பெயரையும், அவரது ஆவணங்களையும் தவறாகப் பயன்படுத்தி யாராவது போலி நிறுவனம் தொடங்கி கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்துள்ளனரா என்ற கோணத்தில் இந்தச் சம்பவம் பெரும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

    125 நாள் வேலை திட்டப் பெண்ணுக்கு ரூ.2.79 கோடி ஜி.எஸ்.டி. வரி நோட்டீஸ் அனுப்பப்பட்ட இந்த சம்பவம், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது...!!

    English Summary

    Ambur Lake Worker Rukmani Gets ₹2.79 Crore GST Dues Notice from Tirupattur Commercial Taxes Department