வேலூர்: குடியாத்தம் அருகே கூலித் தொழிலாளியை கரடி கடித்தததில் அவர் படுகாயமடைந்தார். அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த மக்கள், அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், மோர்தானா அடுத்த ஜங்காலபல்லி கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன். இவர் மரமேறும் தொழிலாளி. இவரது மகன் ராஜகிரி(20). இவரும் தந்தைக்கு உதவியாக மரமேறும் தொழில் செய்து வந்தார்.
மரம் ஏறுவது மட்டுமல்லாமல், ராஜகிரி வீட்டில் உள்ள ஆடுகளையும் மேய்த்து வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை ஜங்காலபல்லி ஆற்றின் கரையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னாடி சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தபோது கரடி ஒன்று இவரை கடிக்கப் பாய்ந்தது. இதை கண்டதும் அஞ்சிய ராஜகிரி, உடனடியாக அதை இடது கையில் தடுத்துள்ளார். அப்போதும் விடாத அந்த கரடி இடது கையை கடித்து குதறியது. இதில் வலி தாங்காமல் ராஜகிரி கூச்சலிட்டதை அடுத்து தூரத்தில் இருந்த கிராம மக்கள் ஓடி வந்தனர். இதையடுத்து அஞ்சிய கரடி, ராஜகிரியின் கையை விட்டுவிட்டு தப்பி ஓடி காட்டில் மறைந்துக் கொண்டது. ஜங்காளபல்லி கிராமம் சுற்றியும் வனப்பகுதி உள்ளதால் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது. காயம் அடைந்த ராஜகிரியை உறவினர்கள் மீட்டு உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து குடியாத்தம் வனத்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கூலி தொழிலாளி ராஜகிரியை கரடி கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக கலையரசன் கைதா? பாசிச தவெக! ஸ்டாலின் கண்டனம்