நீயும் அவிழு.. நானும் அவிழ்க்கிறேன்.. விஜய் குறித்து மீண்டும் சர்ச்சையாக பேசிய ஆர்.எஸ்.பாரதி

  • வேலூர்: தேர்தலில் வெற்றி பெற்றாலும் தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், சிபிஐ, சிபிம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. ஆட்சியை இழந்து, கூட்டணி உடைந்ததால் தவெக மீது திமுக கோபத்தில் உள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் விஜய் குறித்து திமுக நிர்வாகி ஆர்.எஸ். பாரதி மீண்டும் அறுவறுக்கத்தக்க வார்த்தைகளில் விமர்சித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.

    Advertisement

    வேலூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "சட்டமன்றத்தில் திமுகவை பார்த்து விஜய் சவால்விடுகிறார். திமுகவின் 3 துறை ஊழல் பைல்கள் இருப்பதாக கூறினார். நீ அதை அவிழு. நான் மூன்றை அவிழ்க்கிறேன். நான் அவிழ்த்தால் என்ன ஆவது. உனக்கு அவிழ்ப்பது தான் வேலையே. பூச்சாண்டி காட்டும் வேலை எல்லாம் எங்களிடம் வேண்டாம். எந்த கொழுப்பு வேண்டுமானாலும் இருக்கலாம். வாய் கொழுப்பு மட்டும் இருக்க கூடாது.

    Advertisement

    என்னிடம் வால் ஆட்டினால்

    ஒரு எழவும் தெரியாதவர்கள் தான் மந்திரியாக, எம்எல்ஏவாக உள்ளனர். தணிக்கை ரிப்போர்ட் ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்வது வழக்கம். எந்த தணிக்கை ரிப்போர்ட்டும் அரசை பாராட்டி நடக்காது. சாதாரண நகராட்சி, மாநகராட்சி முதல் அரசு வரை நடக்கும் ஒன்று. இதை ஊடகங்கள் பெரிதாக்குகிறார்கள். நான் மோசமான ஆளு. முதல்முறை என்னிடம் ஜெயலலிதா வால் ஆட்டியது. அவருக்கு என்ன நடந்தது என அவர் உயிருடன் இருந்தால் கேளுங்க" என்றார்.

    பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "அடுத்த பிரதமர் விஜய் என்று தவெக அமைச்சர்கள் கூறுகிறார்கள். அவர் உலகமகா தலைவர். அதனால் ஐநா சபைக்கு கூட தலைவர் ஆவார் என்று சொல்லுவார்கள். கற்பனைக்கு எல்லையே கிடையாது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும். விஜய் பிரதமராக வேண்டும் என்றால், ராகுல் காந்தி பிரதமர் இல்லை என முடிவு செய்துவிட்டார்களா. ராகுல் காந்தி பிரதமர் இல்லை என்று சொல்லியுள்ளனர்.

    Advertisement

    விஜய் பிரதமரா

    காங்கிரஸ்காரர்களுக்கு சொரணை இருந்தால் வெளியே வரட்டும். இல்லை விஜய் தான் பிரதமர் என்றால் காங்கிரஸ்காரர்கள் அங்கேயே இருந்து அவர்களுக்கு கூஜா தூக்கட்டும். தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுகிறது. பலமுறை சொல்லியும் தவெக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இப்போதும் தமிழ்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படுகிறது. நாங்கள் தொடர்ந்து சொல்லி கொண்டே இருக்கிறோம். இவர்கள் திருந்தியபாடில்லை. நல்ல மாட்டுக்கு ஒரு அடி, மனிதனுக்கு ஒரு சொல்.

    அவர்கள் மாடா மனுசனா என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். முதலமைச்சர் தவறான தகவலை தெரிவித்தால் என்று வழக்கு போடுவோம் என எங்கள் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். அவர் சட்டமன்றத்தில் நீண்ட காலம் அனுபவம் பெற்றவர். அவர் சொன்னால் சரியாக தான் இருக்கும். இதுகுறித்து எங்கள் சட்டப்பிரிவு அணி முடிவு செய்யும். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் என்னுடைய கல்லூரி நண்பர். என்னுடன் படித்தவர். அதனால் அவரின் செயல்பாடை பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை" என்றார்.

    English Summary

    DMK RS Bharathi said, CM Vijay saying he will open DMK files. If he open I also open. His speech sparks controversy again.