வேலூர்: தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக ஆட்சி சரி இல்லாததால் மறைமுக இந்தி திணிப்பு நடைபெறுகிறது எனவும், இந்திக்காரர்கள் வாலாட்ட நினைத்தால் திராவிட முன்னேற்ற கழகம் ஒட்ட நறுக்கும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எச்சரித்துள்ளார். மேலும் இடைத்தேர்தலின் போது எந்த முதலமைச்சரும் இப்படி தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரித்ததில்லை எனவும், தோல்வி பயத்தால் முதலமைச்சர் விஜய் வீதி வீதியாக செல்கிறார் எனவும் விமர்சித்துள்ளார்.
வேலூர் காட்பாடி இல்லத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசுகையில்," சீனியர் தலைவர் துரைமுருகன் திமுக கூட்டத்தில் பல அட்வைஸ் சொல்லி இருக்கிறார்கள் ஆனால் அதனை திமுக தலைவர் புரிந்து கொள்ளவில்லை என கூறியிருக்கிறார்,
முதலில் நான் சொன்னதை மாண்புமிகு முதல்வர் அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. எங்களுடைய முப்பெரும் விழாவிலே என்ன சொன்னேன் என்றால், நம்முடைய கட்சி சாதாரணமானவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான். இந்தக் கட்சிதான் வலிமையுள்ளவர்களையெல்லாம் எதிர்த்திருக்கிறது. 70 ஆண்டுகாலத்தில் ஆகையினாலே, நாம் சாமானியர்களாகத்தான் நின்று வந்திருக்கிறோம். இந்தக் கட்சி சாமானியர்களால்தான் இருக்கிறது என்று சொன்னேன். அவ்வளவுதான் நான் சொன்னேனே தவிர, இன்னைக்கு நாம மாறிப் போயிட்டோம், நாம எல்லாருக்கும் மாற்றிப் போய் பணம் இருக்கிறவங்களுக்கெல்லாம் சீட்டு கொடுத்தோம் அப்படின்னு நான் சொல்லவே இல்லையே. எனக்கும் தலைவருக்கும் எதுவும் கிடையாது. இது திராவிட முன்னேற்றக் கழகம். இதுல யாராலும் இப்படி துண்டு போட முடியாது. தேர்தல் நேரத்துல மட்டும் மக்களைப் பார்க்கப் போற தலைவர் நான் கிடையாது என முதல்வர் விஜய் சொல்லியிருக்கிறார். பார்க்கட்டுமே ஐயா! ஒரு மக்களைப் போய் யார் வேணா பார்க்கட்டும். ஆனா, இதுவரை எத்தனை ஊர்ல போய் பார்த்திருக்காரு அவரு? ஒரு தமிழ்நாட்டுல... விரிந்து பரந்த தமிழ்நாட்டுல 234 தொகுதியில, ஒரு ரெண்டு, மூணு தொகுதியைத் தவிர வேற எந்த தொகுதி பார்த்திருக்காரு? நாங்க அப்படி இல்ல. நாங்க பார்க்காத குக்கிராமங்கள் இல்ல. நாங்க போகாத இடம் இல்ல. நாங்க சந்திக்காத மக்கள் இல்ல. சந்திக்காத எதிர்ப்பல்ல. சந்திக்காத வெற்றியல்ல. சந்திக்காத தோல்வியல்ல. எல்லாவற்றையும் பார்த்திருக்கிறவங்க நாங்க. அதனால, ரெண்டு ஊர் மாவட்டத்தைப் பார்த்துட்டு எல்லா மாவட்டத்துக்கும் போறேன்னு சொல்றது இல்ல. போனா போதும், காலம் வரும். போகிறாரா, இருக்காரான்னு பார்க்கலாம். பை-எல்கஷன் எந்தவொரு சீஃப் மினிஸ்டரா இருந்தாலும் இப்படி தெரு தெருவா ஒரு நாளைக்கு மூணு நாளைக்கு அலைஞ்சது கிடையாது. நானும் ஒரு 20 பை-எலெக்ஷன்களை பார்த்திருக்கேன். அதுல காமராஜர் இருந்த பை-எலெக்ஷனையும் நாங்க பார்த்திருக்கிறோம். காமராஜர் குடியாத்தத்துல நின்னப்ப கூட ரொம்ப லைட்டா லைட்டாதான் வந்து போனாரே தவிர, கிராமம் கிராமமா வந்து ஓட்டுக் கேக்கல. அதே மாதிரி எம்.ஜி.ஆர். இருந்தபொழுது அண்ணா நகரிலேயும் மயிலாடுதுறையிலும் பை-எலெக்ஷன் நடந்தது. எம்.ஜி.ஆர். அவர்கள் வீதி வீதியா போகலையே! ரெண்டு கூட்டங்கள் பேசிட்டு போயிட்டாரு. ஆகையினால, ஒரு சீஃப் மினிஸ்டரா இருக்கிறவங்க... அதே மாதிரி கலைஞர் சீஃப் மினிஸ்டரா இருக்கும்போதும் பல தேர்தல்கள் நடந்திருக்கு. வேணும்னா எடுத்துப் பார்க்கட்டும். ஒரு கூட்டம், ரெண்டு கூட்டம் பேசியிருப்பாங்க, இல்லன்னா அதுவும் இருக்காது. திமுக ஆட்சியில் இருக்கும்போது நேஷனல் ஹைவேஸ் போர்டுகள்ல எல்லாம் இந்தின்றது தவிர்க்கப்பட்டிருந்தது. இப்ப மறுபடியும் அந்த இந்தி வருது போர்டுல. தமிழ், இங்கிலீஷ் தான் இருக்கும். இப்ப நடுவுல இந்தியை எடுத்துட்டு வராங்க. நம்ம இருக்கிற வரைக்கும் அந்த மாதிரி இல்ல திமுக ஆட்சியில இருக்கும்போது, மறுபடியும் இந்தியைக் கொண்டு வர மாதிரி ஒரு எடுத்துட்டு வந்துட்டு இருக்காங்க. "கொண்டவன் சரியில்லைன்னா கண்டவன் வாலாட்டுவானாம். அந்த மாதிரி, இங்க இருக்கிற சரியில்லாத ஆட்சின்றதுனால இப்ப வாலாட்டுறான் இந்திவாலா. ஆனால், வாலை நறுக்கிடும் திராவிட முன்னேற்றக் கழகம்" என்றார்.துரைமுருகன்
மிக பலம் வாய்ந்த ராமநாதபுரம் ராஜாவை ஒரு சைக்கிள் கடை வைத்த தங்கப்பனை வைத்து தோற்கடித்தார். அதேபோன்று சிவகங்கை மகாராஜாவை அவருடைய எதிரிலே ஒரு சில்லறை கடை வைத்திருந்த செட்டியார், வைத்து தோற்கடித்தார். பொள்ளாச்சி மகாலிங்கத்தை தோற்கடித்தார். புதுக்கோட்டை மகாராஜாவை அவர் வீட்டில் வேலைக்காரனாக இருந்த காடுவெட்டி தியாகராஜனை வைத்து தோற்கடித்தார்.திமுக
விஜய்
இடைத் தேர்தல்
கலைஞர்
இந்தி திணிப்பு