பெண் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை.. வேலூரில் பெண் தலைமைக்காவலர் படுகொலை.. சிங்கப்பெண் எங்கே?

  • வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் தலைமைக்காவலர் ஒருவர், அவரது கணவராலேயே கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரிக்கே இந்த கதி என்றால், சாதாரண பெண்களின் பாதுகாப்பு என்னவாகும் என்ற காரசாரமான விவாதங்களும் அரசியல் களத்தில் வெடித்துள்ளன.

    Advertisement

    சம்பவம் நடந்தது எப்படி?

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வி (41) என்பவர், குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமைக்காவலராகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் அரவிந்தன் (45) ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாகக் குடும்பப் பிரச்சினை மற்றும் சொத்துப் பகிர்வு தொடர்பான தகராறு காரணமாக இவர்களுக்கு இடையே தொடர் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனால் மனக்கசப்படைந்த தாமரைச்செல்வி, கணவரைப் பிரிந்து கடந்த இரண்டு மாதங்களாகத் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    Advertisement

    இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்து தாமரைச்செல்வி தனது இருசக்கர வாகனத்தில் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அரவிந்தன், தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்திரிக்கோலால் தாமரைச்செல்வியின் கழுத்து மற்றும் உடல் பகுதிகளில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

    அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலி

    ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்த தாமரைச்செல்வியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    Advertisement

    மனைவியைக் குத்திய பின்னர், அரவிந்தனும் அதே ஆயுதத்தால் தனது நெஞ்சுப் பகுதியில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், குடியாத்தம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை தீவிரக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசியல் களத்தில் வெடிக்கும் கேள்விகள்: 'சிங்கப்பெண் படை' எங்கே?

    தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. சமீபத்தில் முதல்வர் விஜய் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'சிங்கப்பெண் படை' கொண்டு வந்தார். இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு என்றும் கூறினார்.

    Advertisement

    சிங்கப்பெண் படை பொது இடங்களில் பெண்களுக்கு அறிவுரை கூறி ரீலிஸ் வெளியிடும் வேளையில், மறுபுறம் சீருடை அணிந்து சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் ஒரு பெண் தலைமைக்காவலருக்கே பொதுவெளியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.

    ஒரு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் அதிகாரியே இரவு நேரத்தில் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாமல் கத்தியால் குத்திக் கொலை செய்யப்படுகிறார் என்றால், சாமானிய பெண்கள் எங்கே செல்வது? வெறும் அரசியல் மேடைகளில் 'சிங்கப்பெண்கள்' எனப் பேசுவதோ, புதிய படைகள் அமைப்பது மட்டுமே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்துவிடாது. களத்தில் பெண்களுக்கான உண்மையான பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான சட்ட நடவடிக்கைகளும், குற்றவாளிகளுக்குடனடி தண்டனையும் மிக அவசியம்" எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    Advertisement

    குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது

    English Summary

    Gudiyattam Woman Head Constable case: Security Concerns Rise Amid in Tamil Nadu