பிரதமரே செய்றாரே! ஏன் விஜய் செய்யக் கூடாதா? இனியாவது செய்வாரா? தமிழிசை அட்டாக்

  • வேலூர்: மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடம் தெரிகிறது என தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுன், காக்கா தோப்பு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    Advertisement

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் மற்றும் தெலுங்கானா முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர் ராஜன் மாணவர்களுடன் யோகா பயிற்சிகளை மேற்கொண்டார்.

    பின்னர் அவர் பேசுகையில், உலகம் முழுவதும் யோகா தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருடத்தில் 365 நாட்களும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

    அதேபோன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். யோகா என்பது குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு மிகவும் தேவை. யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை அனைவரும் பழக வேண்டும்.

    Advertisement

    யோகா என்பது உடல், நலமாக இருக்கிறதுக்கு செய்யக்கூடியது. மேலும் யோகா தினம் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனி கவனம் செலுத்துவார் என்று நான் நினைக்கிறேன்.

    பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றி கழக அரசு ஒரு மாதம் காலம் முடிந்து இருக்கிறது.

    தமிழக வெற்றி கழகம் அரசு நிதித்துறை குறித்து வெள்ளை அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறார்கள். தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை ஆரோக்கியமாக சென்று இருக்கிறது. தமிழக சட்டசபையில் ஆளுநர் முழுமையான உரை வாசித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி.

    Advertisement

    தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா? தமிழ்நாடு காங்கிரஸ் அமைச்சர்களால் கர்நாடகாவில் மேகதாது அணையை தடுக்க முடியவில்லை என்றால் இவர்களுடைய நிலை என்ன. மேலும் காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடம் தான் தெரிந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

    English Summary

    Former Telangana Governor Dr. Tamilisai Soundararajan criticized Congress over the Mekedatu dam issue, alleging the party is adopting a double standard approach on the inter-state water dispute.