டாஸ்மாக் கடையை அடைத்து போராடிய ஊழியர்களுக்கு ட்விஸ்ட்.. ஒரே நாளில் பறந்து வந்த சஸ்பெண்ட் ஆர்டர்

  • வேலூர்: டாஸ்மாக் கடை ஊழியர்கள் நேற்று முன்தினமும், நேற்றும் பல்வேறு இடங்களில் கடைகளை மூடினார்கள். சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் நேற்று அனுமதியின்றி கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் 38 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். பலரையும் பணியிட நீக்கம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் தயராகி வருகிறது.

    Advertisement

    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கைவிடக்கோரி ஒருங்கிணைந்த டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களை ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தினர்.

    Advertisement

    ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் மொத்தம் 76 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் காலியான பின் மீண்டும் திரும்பப்பெறப்படுகின்றன. இந்த நடைமுறையை கைவிட வேண்டும் எனக்குறி டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள 76 கடைகளையும் மூடி போராட்டம் நடத்துவோம் என டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கூறியிருந்தர்கள்.

    அதன்படி நேற்று ராணிப்பேட்டை டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கைவிட வேண்டும். எம்.ஆர்.பி. விலையில் மதுவை விற்பனை செய்ய வேண்டும் என்றால், கூடுதல் செலவினங்களை டாஸ்மாக் நிர்வாகம் ஏற்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    Advertisement

    டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் விற்பனையாளர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தை சுமூக முடிவுக்கு வராததால் மாவட்டத்தில் உள்ள 76 டாஸ்மாக் கடைகளையும் மூடி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்க. ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது வாங்க வந்த மதுப்பிரியர்கள் பல மணி நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகினர். நீண்ட நேரமாகியும் கடைகள் திறக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் திடீரென அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டது.
    காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Advertisement


    கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

    டாஸ்மாக் உடலுக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிப்பது மட்டுமல்லாமல், ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும் விளங்குகிறது. முதல்வர் விஜய் அரசே, டாஸ்மாக்கை முற்றாக விட்டொழிப்பதே சரியான தீர்வாகும். கூழுக்கும் மீசைக்கும் ஒரே நேரத்தில் ஆசை கொள்ளாதீர்கள்" என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கையில், "ஆட்சிக்கு வந்தவுடன் விஜய் அண்ணா எல்லா டாஸ்மாக் கடைகளையும் மூடிவிடுவார் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது அதற்கு நேர்மாறாக மாற்றிப் பேச ஆரம்பித்துவிட்டனர்.ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டுமென்றால் சிலவற்றை இழந்தாகத்தான் வேண்டும். அரசுக்கு வரும் ரூபாய் 55,000 கோடி வருமானத்தை இழக்க மனமும் இல்லாமல், டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடத் துணிவும் இல்லாமல் திண்டாடுகிறார்கள்.

    Advertisement

    டாஸ்மாக் உற்பத்தி முதல் காலி பாட்டில் விற்பனை வரை எங்கும் ஊழல், எதிலும் ஊழல். ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினாலும் கடை வாடகை, மின் கட்டணம், தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் சில்லறை பிரச்சினைகளுக்காக ஊழியர்களை சஸ்பெண்ட் செய்வது தீர்வாகாது.

    English Summary

    Thirty-eight TASMAC shop supervisors have been suspended for participating in a shop-closure protest yesterday without permission. The TASMAC administration is preparing to suspend several others as well.