திருப்பத்தூர் : 19 வயது வரை ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து தன்னை வளர்த்து ஆளாக்கிய தாய், தந்தை காலில் விழுந்து கெஞ்சியும், இளம் பெண் ஒருவர் காதலனுடன் தான் செல்வேன் என்று பிடிவாதமாக கூறினார். "அவன் பொம்பள பொறுக்கிம்மா..." என்று பித்து பிடித்தவர்களை போல் கலங்கி அழுதபடி பெண்ணின் கால்களை பிடித்து கெஞ்சி தாய், தந்தை அழைத்த போதும், அவரது மகள் கண்டு கொள்ளாமல் காதலனுடன் சென்றுவிட்டார்.. இருவரும் ஒரே சாதி என்கிற போது, இந்த காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி விரிவாக பார்ப்போம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலாப்பேட்டை அடுத்த கட்டேரி லாரிசெட் பகுதியைச் சேர்ந்தவர் காளி, கவிதா தம்பதியின் மகள் திவ்யதர்ஷினி. இவர் தர்மபுரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 3ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். கல்லூரி மாணவி திவ்யதர்ஷினி தினமும் பேருந்து மூலம் ஏறி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். அப்படி பேருந்தில் ஏறி செல்ல பேருந்து நிறுத்தத்தில் திவ்யதர்ஷினி காத்திருப்பாராம். அப்படி காத்திருக்கும் நேரங்களில் அந்த பகுதிகளில் வந்து சென்ற ஆட்டோ ஓட்டுநர் பெருமாள், கல்லூரி மாணவி திவ்யதர்ஷினியுடன் பழகியுள்ளார்.
இந்த வழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. திவ்யதர்ஷினி பெருமாள் ஜோடி கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்களாம். இவர்கள் இருவரும் ஒரே சாதி என்றாலும், பெருமாள் வேறு சில பெண்களுடன் சுற்றி வந்தவர் என்று கூறி திவ்யதர்ஷினியின் பெற்றோர், பெருமாளுடனான காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திவ்யதர்ஷினி, பெருமாளை திருமணம் செய்து அவருடன் வாழ முடிவு செய்தார். இதற்காக கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய திவ்யதர்ஷினி, பெருமாள் ஜோடி, சேலம் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மகளைக் காணாமல் திவ்யதர்ஷினியின் பெற்றோர் தீவிரமாக தேடி வந்த நிலையில், திவ்யதர்ஷினி, பெருமாள் ஜோடி திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை தஞ்சம் அடைந்தனர். இருவரும் என்ன ஜாதி என்பதை அறிந்து கொண்ட மகளிர் போலீசார், காதல் ஜோடி, அனைத்து மகளிர் காவல் நிலையம் வந்துள்ளதை பெற்றோர்களை போனில் அழைத்து தகவல் கூறினார்கள். இதனை கேட்டு காவல் நிலையத்திற்கு திவ்யதர்ஷினியின் தாய் கவிதா, தந்தை காளி மற்றும் உறவினர்கள் ஆகியோர் வந்தனர். அவர்கள் திவ்யதர்ஷினியை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து செல்ல சமாதானம் செய்து கொண்டிருந்தனர். அப்போது போலீசார் முன்னிலையில் திவ்யதர்ஷினியின் காலில் விழுந்த அவரது தந்தை காளி, தங்களுடன் வருமாறு கால்களைப் பிடித்து கெஞ்சி அழுதார். அவருடன் தாய் கவிதாவும் கெஞ்சி கதறி அழுதார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வந்து நிலைமையை சரி செய்தனர். இது தொடர்பாக திவ்யதர்ஷினியின் தந்தை காளி செய்தியாளர்களிடம் பேசுகையில், பெருமாளுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. குடி பழக்கம், கஞ்சா பழக்கமும் அதிகமாக இருக்கிறது. அவருக்கு இல்லாத கெட்டப்பழக்கமே கிடையாது. அவர் பெண் பொறுக்கி.. நகையை பறிப்பது, சொத்தை எழுதி வாங்குவது, பணம் வாங்குவது போன்ற செயல்களை செய்பவர்.. என் பெண்ணிடம் பணம் வாங்கி தின்றுள்ளார் என்று கடுமையாக கூறினார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர், இந்திய சமூக, சட்டப்படி பெற்றோர்கள் விரும்பாத காதல் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பரம்பரை மற்றும் பெற்றோர்களின் பணமோ, சொல்லோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன், இதுபோன்ற முட்டாள்தனம் உலகின் வேறு எங்காவது நடக்கிறதா? அந்தப் பெண் தனக்குப் பிடித்த ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள். உலகின் எந்தப் பகுதியிலும் பெற்றோர்கள் இப்படி நடந்துகொள்வதில்லை என்று கூறியுள்ளார். மூன்றாவதாக ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "போலீஸ் கல்யாணத்தை செய்து வைக்கும் முன், மாப்பிள்ளை பற்றி விசாரித்த பின் கல்யாணம் செய்து வைக்க வேண்டும். பெற்றவர்கள் போல் கல்யாணம் செய்து வைத்தால் போதாது, அவர்களை போல் மாப்பிள்ளை பற்றி விசாரிப்பதும் போலீசின் கடமை... கல்யாணம் பின் நடக்கும் பஞ்சாயத்தையும் அவர்கள் தான் தீர்க்க வேண்டும்