கணவரை காலி செய்துட்டு.. பைக்கிலேயே 22 நாட்கள் ஜாலியாக சுற்றிய வாணியம்பாடி ஜோடி.. அங்கேதான் ஹைலைட்டே

  • வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கணவரை கள்ளக்காதலன் உதவியுடன் கொன்றுள்ளார் இளம்பெண்.. இந்த கொலையைவிட, அதற்கு பிறகு அந்த பெண் நடந்து கொண்ட செயல்கள்தான், போலீசுக்கே அதிர்ச்சியை தந்து விட்டது.. இது தொடர்பான விசாரணை நடந்து வந்தாலும், வாணியம்பாடி கொலையின் அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை.

    Advertisement

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் உள்ளது கங்குந்தி என்ற காட்டுப்பகுதி.. இங்கு \கடந்த அக்டோபர் 1ம் தேதி வனவர் பாபாஜான் ரோந்து சென்றுள்ளார். அப்போது அங்கு புதிதாக குழி தோண்டப்பட்டதற்கான தடயங்களை பார்த்து பதறிப்போய் உடனடியாக, வனத்துறை மற்றும் குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    Advertisement

    திருப்பத்தூர் தாசில்தார்

    இதையடுத்து குப்பம் தாசில்தார் ரமேஷ்பாபு, காவல் ஆய்வாளர் ஜி.டி. நாயுடு உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் குழியைத் தோண்டிப் பார்த்தபோது, அதில் ஆண் சடலம் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அக்டோபர் 2ம் தேதி நடந்த சோதனையிலும் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவரம் வெளியாகியுள்ளது.

    சடலத்தை பரிசோதித்தபோது, கழுத்தை நெரித்தும், முகம் மற்றும் தலையில் பலமாகத் தாக்கியும் கொலை செய்ததற்கான தடயங்கள் இருந்துள்ளன.. மேலும், சடலத்தின் சட்டைக் காலரில் "குமார் டைலர்" என்ற பெயர் கொண்ட அடையாளமும், சட்டைப் பையில் திருப்பத்தூர் தர்மராஜா கோயில் தெருவில் உள்ள சிவக்குமார் நகை அடகு கடையின் ரசீதும் இருந்தன. இதையடுத்து சடலம் குப்பம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பப்பட்டது.

    Advertisement

    அந்த ரசீதை வைத்து திருப்பத்தூர் நகை அடகு கடைக்குச் சென்ற குப்பம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சடலமாக மீட்கப்பட்டவர் வாணியம்பாடி அருகே குரிசிலாப்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரம்பூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதான சசிகுமார் என்பது தெரியவந்தது.

    அதுமட்டுமல்ல, சசிகுமார் சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்தவராம்.. அவருக்கு 32 வயதில் லட்சுமி என்ற மனைவியும், 7 மற்றும் 13 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர்.

    வாணியம்பாடி லட்சுமி

    இந்நிலையில், லட்சுமி திடீரென காணாமல் போனார்.. இதனால அவரது தந்தை மாணிக்கம் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் குரிசிலாப்பட்டு போலீசாருடன் இணைந்து குப்பம் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

    Advertisement

    அப்போதுதான் லட்சுமியின் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்தது.. ஆந்திர மாநிலம் குப்பம் மண்டலத்துக்குட்பட்ட துருகம் பகுதியைச் சேர்ந்த பிரபுதேவா (32) என்பவருடன் லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரபுதேவா கரம்பூர் பகுதியில் ரேஷன் அரிசியை வாங்கி ஆந்திராவுக்கு கடத்தி செல்பவராம்.. அப்போதுதான் இவர்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது..

    5 முறை பிரபுதேவாவுடன் ஓட்டம்

    இந்த கள்ளத்தொடர்பு விவகாரத்தால் லட்சுமி ஏற்கனவே 5 முறை பிரபுதேவாவுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டாராம். இதுதொடர்பாக திருப்பத்தூர் போலீசிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், 2 மகன்களுக்கும் தாய் வேண்டும் என்று நினைத்த சசிகுமார், லட்சுமியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

    Advertisement

    இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த மாதம் 27ம் தேதி, டிராக்டர் கடன் தவணை கட்ட வேண்டும் என்று கூறி, தனது பாட்டி சிவகாமி அணிந்திருந்த கம்மலை சசிகுமார் வாங்கியுள்ளார். பிறகு மனைவி லட்சுமியுடன் திருப்பத்தூர் தர்மராஜா கோயில் தெருவில் உள்ள சிவக்குமார் நகை அடகு கடைக்குச் சென்று அந்த கம்மலை அடகு வைத்து பணம் வாங்கியுள்ளார்.

    மொத்தம் 22 நாட்கள் பைக்கிலேயே

    அதன்பிறகு சசிகுமாரும் லட்சுமியும் ஆந்திர மாநிலம் குப்பம் அருகே உள்ள கங்குந்தி வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு சசிகுமார் தண்ணி அடித்துள்ளார்.. அப்போது லட்சுமி தனது கள்ளக்காதலன் பிரபுதேவாவை அங்கு வரவழைத்துள்ளார். பின்னர் 2 பேரும் சேர்ந்து சசிகுமாரை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார்கள்..

    Advertisement

    கணவரைக் கொலை செய்த பிறகு, லட்சுமியும் பிரபுதேவாவும் அவரது உடலை அதே காட்டுப்பகுதியிலேயே குழி தோண்டிப் புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அதன்பிறகு 2 பேரும் பைக்கிலேயே பெங்களூரு சென்றுள்ளனர். அங்கிருந்து ஹைதராபாத், திருப்பதி, சென்னை, சேலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் சென்று சுற்றித்திரிந்துள்ளனர். இப்படியே 22 நாட்களாக இருவரும் ஊர் ஊராகச் சுற்றியுள்ளனர்.

    சொந்த ஊருக்கு திரும்பினர்

    கையில் இருந்த பணம் தீர்ந்ததும் இருவரும் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். அப்போது குப்பம் அருகே பைக்கில் வந்த லட்சுமியையும் பிரபுதேவாவையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவரை இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து குப்பம் போலீசார் லட்சுமி, பிரபுதேவா இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே 5 முறை கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மனைவி, மீண்டும் குடும்பத்துக்குத் திரும்பிய பிறகும் கணவரைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!

    English Summary

    Vaniyambadi Couple Kills Husband, Enjoys 22-Day Bike Trip.. What Happened Next?