வாணியம்பாடியில் பொசுக்னு மயங்கி விழுந்த அரிய வகை ஆந்தை.. உடனே இயற்கை ஆர்வலர்கள் செய்த சூப்பர் சம்பவம்

  • வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடும் வெயிலால் மயங்கி விழுந்த அரிய வகை பாறை ஆந்தையை இயற்கை ஆர்வலர்கள் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இந்தியா முழுவதிலுமே வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், வேலூர் திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கொளுத்தியெடுத்து வருகிறது.. இந்த வெயில் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட அந்த ஆந்தைக்கு அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

    Advertisement

    வெயில் சுட்டெரித்து வரும இந்த நேரத்தில் மனிதர்களே வெளியில் நடமாட முடியாமல் சிரமப்படுகிறார்கள்.. அப்படியிருக்க, பறவைகள் மற்றும் விலங்குகளின் நிலைமை பரிதாபமாக உள்ளது.

    Advertisement

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள இஸ்லாமியா கல்லூரி அருகே அரிய வகையைச் சேர்ந்த பாறை ஆந்தை ஒன்று மயங்கிக் கிடந்தது.. அதிக வெப்பம் காரணமாக அந்த ஆந்தை மயங்கி விழுந்ததாகத் தெரிகிறது.. அந்த வழியாகச் சென்ற இயற்கை ஆர்வலர்களான வடிவேல், சேதுராமன் ஆகியோர் இதைப் பார்த்துள்ளனர்..

    உடனே ஆந்தையை மீட்டு, அதற்குத் தண்ணீர் கொடுத்து பாதுகாப்பாகப் பராமரித்தனர்.. பிறகு வாணியம்பாடி வனத்துறையினரிடம் ஆந்தையை ஒப்படைத்தனர்.. இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து ஆந்தையைப் பெற்றுக்கொண்ட வனத்துறையினர், அதை மீண்டும் வனப்பகுதியில் விட்டனர்.. இதனால், வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆந்தை மீண்டும் இயற்கையான சூழலுக்குத் திரும்பியுள்ளது..

    Advertisement

    பாறை ஆந்தை

    உரிய நேரத்தில் ஆந்தையை மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்த வடிவேல், சேதுராமன் ஆகியோரின் செயலைப் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.. அதேசமயம். பாறை ஆந்தை அரிய வகை இனத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நிலையில், கோடை வெப்பத்தால் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் பாதிக்கப்படுவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது..

    இது ஏதோ ஒரு பகுதியில் மட்டும் நடக்கும் சம்பவம் என்று ஒதுக்கிவிட முடியாது.. 2026 மே மாதத்தில் டெல்லியில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டியபோது, நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் வெப்ப பாதிப்பால் புறாக்கள், கழுகுகள் உள்ளிட்ட பறவைகள் மயங்கிக் கிடந்ததாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.. தெருநாய்கள், பூனைகளும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின..

    Advertisement
    வாணியம்பாடியில் மனைவியின் ஆபரேஷனுக்கு 40000 கடன்.. 51 லட்சம் கட்ட சொல்லி நோட்டீஸ்

    வெயில் கொடுமை

    சத்தீஸ்கர் மாநிலத்திலும் வெப்பத்தின் தாக்கம் கவலையை ஏற்படுத்தியது.. குறிப்பாக காங்கேர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வவ்வால்கள் உயிரிழந்ததாகவும், கோர்பா பகுதியில் இதற்கு முன்பு சுமார் 200 வவ்வால்கள் இறந்ததாகவும் செய்திகள் வெளியாகின.. மயில்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் உயிரிழப்புகளும் பதிவாகின..

    வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் பறவைகளுக்குத் தண்ணீர் கிடைப்பது மிகவும் முக்கியம்.. வீட்டின் மொட்டை மாடி, பால்கனி அல்லது பாதுகாப்பான நிழலான இடத்தில் சுத்தமான தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைக்கலாம்.. தண்ணீரை அடிக்கடி மாற்றுவதும் அவசியம்..

    Advertisement

    அதேபோல், மயங்கிக் கிடக்கும் பறவைகளைப் பார்த்தால் அவற்றைத் தாங்களாகவே கையாளாமல் வனத்துறையினருக்குத் தகவல் கொடுப்பது நல்லது..!!!

    English Summary

    Vaniyambadi Owl Rescue: Rare Rock Owl Collapses in Heat, What Two Nature Lovers Did Next