லாட்ஜில் விபச்சார தொழில்.. பெண்ணால் வந்த வினை.. ரூ.2 லட்சம் உசிரையே வாங்கிருச்சே.. வெலவெலத்த வேலூர்

  • வேலூர்: வேலூர் லாட்ஜில் வேலை பார்த்து வந்த தேவராஜ் திடீரென மாயமானார்.. இதனால் அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடத் தொடங்கினர். கடைசியில், கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் அடுத்தடுத்து கைதுகள் நடந்து வரும் நிலையில், மொத்தம் 6 பேர் சிக்கியுள்ளனர். அப்படி என்னதான் நடந்தது?

    Advertisement

    வேலூர் மாவட்டம், திருவலம் அருகேயுள்ள அம்முண்டி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு 30 வயதாகிறது.. . காகிதப்பட்டறையிலுள்ள தனியார் லாட்ஜில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நதியா, 28.

    Advertisement

    வேலூர் லாட்ஜ்

    கடந்த 9-ம் தேதி தேவராஜ் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த நதியா, வேலூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், வேலூர் சேண்பாக்கத்தைச் சேர்ந்த யாசின், சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த உமர் ஆகியோர் தனது கணவரை காரில் அழைத்துச் சென்றதாகவும், அவர் மாயமானதில் அவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.. சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து தேவராஜை தேடினார்கள்.. அப்போதுதான், யாசின் தனது காரில் தேவராஜை அழைத்துச் சென்றது தெரியவந்தது. யாசினையும் உமரையும் தேடிய போலீசார், அவர்களைப் பிடித்து விசாரித்தபோது கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

    Advertisement

    யாசின் பாலியல் தொழில்

    யாசின் பாலியல் தொழிலில் புரோக்கராக இருந்து வந்துள்ளார். அவரிடம் தேவராஜும் வேலை பார்த்திருக்கிறார். ஒரு கட்டத்தில், யாசினிடம் இருந்து விலகி தனியாக பாலியல் தொழில் நடத்த தேவராஜ் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த சூழலில்தான் தேஜாஸ்ரீ என்ற பெண்ணிடம் தேவராஜ் ரூ.2 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். ஆனால், வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் தேஜாஸ்ரீ, யாசினைத் தொடர்புகொண்டு தேவராஜிடம் இருந்து பணத்தை பெற்று தரும்படி கேட்டாராம்..

    இறைச்சி வெட்டும் கத்தி

    உடனே, பணம் தொடர்பாகப் பேச வேண்டும் என்று கூறி, கே.வி.குப்பம் அருகேயுள்ள மேல்விளாச்சூர் பகுதியில் உள்ள உமரின் வீட்டுக்கு தேவராஜை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பேச்சுவார்த்தையின்போது தகராறு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    அப்போது இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து தேவராஜின் கழுத்தில் வெட்டியுள்ளனர். அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதிகளிலும் வெட்டியிருக்கிறார்கள்.. இதில், தேவராஜ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கொலைக்கு பிறகு, தேவராஜின் உடலை யாசின் வீட்டுக்கு பின்னாடியிருந்த காலி இடத்தில் பெரிய பள்ளம் தோண்டிப் புதைத்துள்ளனர்..

    அடுத்தடுத்து கைது

    இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, போலீசார் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்குச் சென்றனர். ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி தேவராஜின் உடலை மீட்டனர். கே.வி.குப்பம் தாசில்தார் சித்ரா முன்னிலையில் இந்தப் பணி நடைபெற்றது. பிறகு மருத்துவக் குழுவினர் அதே பகுதியில் போஸ்ட் மார்ட்டமும் செய்தனர்.

    Advertisement

    இந்த வழக்கில் யாசின், உமர் உள்ளிட்ட 3 பேர் முதலில் கைது செய்யட்டார்கள்.. பிறகு யாசினின் மனைவி ஹரிசுதா, காட்பாடி காந்தி நகரைச் சேர்ந்த பரணிதரன் ஆகியோர் கைதானார்கள்.. இவர்களை தொடர்ந்து, கொணவட்டத்தைச் சேர்ந்த அமீது, 46, தாருகேஷ், 24, சித்தூரைச் சேர்ந்த பாலியல் தொழில் தரகர் தேஜா, 23, ஆகிய மேலும் 3 பேரை வேலூர் வடக்கு போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, தேஜாஸ்ரீ உள்ளிட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது... ரூ.2 லட்சம் கடன் விவகாரம், பாலியல் தொழிலில் ஏற்பட்டதாகக் கூறப்படும் போட்டி, கொலை செய்து உடலைப் புதைத்த சம்பவம் என இந்த வழக்கில் பல தகவல்கள் வெளியாகி, வேலூரை வெலவெலக்க வைத்து வருகிறது...!!

    English Summary

    Vellore Lodge Prostitution Business: A Woman, Rs 2 Lakh Debt and a Shocking Murder! What Went Wrong?