வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண் தலைமை காவலரை, அவரது கணவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவம் தொடர்பாக கணவன் அர்வினை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். பெண்கள் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே தவெக அரசு மீது சரமாரியாக விமர்சனங்களை அடுக்கி வரும் நிலையில், தற்போது பெண் காவலர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் எர்த்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் தாமரைச்செல்வி. இவர், குடியாத்தம் நகர காவல் நிலைத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். ஆக.13ம் தேதி இரவு இவர் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்திருக்கிறது. டவுன் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து நெல்லூர்பேட்டை வழியாக வீட்டிற்கு தாமரைச்செல்வி சென்றுக்கொண்டிருந்தபோது.. அப்பகுதியில் மறைந்திருந்த அவரது கணவர் அர்வின், தாமரைச்செல்வியை சரமாரியாக கத்தியால் குத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே தாமரைச்செல்வி சரிந்து விழுந்திருக்கிறார். காக்கி சீருடை முழுவதுமாக ரத்தத்தில் நனைந்திருக்கிறது. எவ்வளவு போராடியும் அங்கிருந்து தப்பிக்க முடியாததால், அவர் பரிதாபமாக அங்கேயே உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவத்தில் கணவர் அர்வினும், தன்னை தானே நெஞ்சில் குத்திக்கொண்டிருக்கிறார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தாமரைச்செல்வியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். கணவர் அர்வினையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் தீவிரமடைந்திருக்கிறது என தவெக விமர்சித்திருந்தது. இப்போது ஆட்சி அதிகாரத்தில் அக்கட்சிதான் இருக்கிறது. ஆனால், சட்டம் ஒழுங்கை சரியாக வைத்திருக்கவில்லை.. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை என்று எதிர்க்கட்சிகள் தவெக அரசை விமர்சிக்க தொடங்கியிருக்கின்றன. இப்படி இருக்கையில் தலைமை காவலர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம், அரசின் மீதான விமர்சனங்களை தீவிரப்படுத்தியிருக்கிறது.கொலை நடந்தது எப்படி?