வேலூர்: வேலூர் அருகே, பெண் ஒருவர் கள்ளக்காதலில் ஈடுபட்டதால், அந்த குடும்பமே இன்று சின்னாபின்னமாகிவிட்டது.. அதுமட்டுமல்ல, ஒரு பெண்ணை அதுவும் கட்டின மனைவியை, இந்த அளவுக்கு கொடூரமாக கொலை செய்ய முடியுமா? என்ற அதிர்ச்சி கேள்விதான் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.. வேலூர் மாவட்ட போலீசார் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டாலும், அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை.. போதாக்குறைக்கு கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் தந்துள்ள வாக்குமூலம், அதற்கு மேல் பதைபதைக்க வைத்து வருகிறது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ளது ராஜக்கல் கிராமம்.. இங்கு வசித்து வருபவர் விஜயகுமார் .. 48 வயதான இவர் கார் டிரைவராக உள்ளார்..
இவரது மனைவி தனலட்சுமிக்கு 36 வயதாகிறது.. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவராம்.. இவர்களுக்கு 18 வருடங்களுக்கு முன்பு கல்யாணமாகியுள்ளது.. இப்போது இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். பேரணாம்பட்டில் ஒரு வீட்டில் தங்கி வீட்டு வேலை செய்து வருகிறாராம் தனலட்சுமி.. 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தன்னுடைய வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.. அதனால் விஜயகுமார் தனது குழந்தைகளை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், சின்னவரிகம் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்ற 25 வயது இளைஞருக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மனைவியின் இந்தத் தொடர்பு குறித்து விஜயகுமார் பலமுறை அவரிடம் பேசியுள்ளார்., கண்டித்து உள்ளார்.. அட்வைஸ் செய்துள்ளார்.. ஆனால் தனலட்சுமி கணவன் பேச்சை கொஞ்சமும் மதிக்கவில்லையாம். சம்பவத்தன்றும் தனலட்சுமியிடம் விஜயகுமார் இது குறித்து வாக்குவாதம் செய்துள்ளார்.. ஒருகட்டத்தில் ஆத்திரம் அதிகமாகவும், தனலட்சுமியை வெட்டி கொன்றுள்ளார். கொலை செய்து 2 நாட்களான பிறகு, வீட்டின் கிச்சனிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். குடியாத்தம் காவல்துறையினர் வீட்டில் சோதனை செய்தபோது, சமையலறை பரணில் அழுகிய நிலையில் தனலட்சுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விஜயகுமாரை கைது செய்து விசாரித்துள்ளனர்.. அப்போது பல்வேறு தகவல்களை வாக்குமூலமாக சொல்லி அதிர்ச்சியடைய வைத்துள்ளார். அதாவது சமீப நாட்களாகவே தனலட்சுமி விஜயகுமாரை ஆபாசமாகப் பேசியதுடன், "நீ ஆம்பளையா?" என்று கேட்டாராம்.. இதனால் ஏற்பட்ட கோபத்தில், மனைவியை தீர்த்து கட்டுவது என்று விஜயகுமார் முடிவெடுத்துள்ளார்.. இதற்காக பள்ளிகொண்டா மார்க்கெட்டிலிருந்து ஒரு அரிவாளை வாங்கி வந்து வீட்டில் மறைத்து வைத்து விட்டாராம். சம்பவத்தன்று குமரேசனுடன் சினிமாவுக்கு நைட் ஷோ சென்றுவிட்டு தனலட்சுமி வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது, "ஏன் வீட்டுக்கு லேட்டா வருகிறாய்? செல்போன் ஏன் ஸ்விட்ச் ஆப் செய்துள்ளாய்? எங்கே போயிருந்தாய்? என்று விஜயகுமார் கேட்டுள்ளார்.. அதற்கு தனலட்சுமி, "நான் எங்கே வேண்டுமானாலும் போவேன், அதைக் கேட்க நீ யார்? குமரேசனும் நானும் உல்லாசமாக இருந்துவிட்டு வந்தோம்" என்று சொல்லி, விஜயகுமாரை தரக்குறைவாக பேசினாராம். இதனால் உச்சக்கட்ட கோபத்துக்கு ஆளான விஜயகுமார் வீட்டில் இருந்த அரிவாளால் தனலட்சுமியின் 2 மணிக்கட்டு நரம்புகளையும் வெட்டியுள்ளார்., பலத்த ரத்தக்காயங்களுடன் தனலட்சுமி மயங்கி விழுந்ததும், அவரது கால்களை கைபேசி சார்ஜர் ஒயரால் கட்டியுள்ளார்.. பிறகு முகத்தைத் துணியால் இறுக்கியுள்ளார். சடலத்தை அரிசி சாக்குப்பையில் கட்டி, சமையலறை பரணில் ஏற்றி, அதன் மேல் பழைய பொருட்களைப் போட்டு மறைத்துள்ளார். அதன் பிறகு, ரத்தக் கறை படிந்த துணிகளை மாடியில் வீசிவிட்டு, சமையலறையில் அரிவாளை மறைத்து வைத்துவிட்டுப் பிள்ளைகளுடன் படுத்து அன்றிரவு தூங்கியுள்ளார். மறுநாள் காலை பிள்ளைகளுக்குச் சமைத்து கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் மனைவியைக் காணவில்லை என்று நாடகமாடினாராம். இவ்வளவு தகவல்களையும், வாக்குமூலமாக விஜயகுமார் சொன்னதுமே, போலீசார் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார்களாம்.. பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விஜயகுமார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் உலகமறியா அந்த 3 பிள்ளைகளும் தாய், தந்தையின்றி கதறி கொண்டிருக்கின்றன...!!வேலூர் தம்பதி
பரணில் முடிந்த காதல் வாழ்க்கை
குமரேசனுடன் ஜாலியா சுத்திட்டு..
அறுக்கப்பட்ட மணிக்கட்டு
சமையலறை அரிவாள்