வாணியம்பாடியில் வாயை விட்ட கணவன்.. கழுத்தில் ஒரே வெட்டில் கொன்று போலீசில் சரணடைந்த மனைவி

  • வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொல்ல குப்பம் பதியை சேர்ந்த ரம்யா (35) இவரது கணவர் குமார் (40) இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிய நிலையில் இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். குமார் மது போதைக்கு அடிமையான நிலையில் குடிபோதையில் தொடர்ந்து மனைவியிடம் சண்டையிட்டு மனைவியை சித்திரவதை செய்து வந்துள்ளார்.

    Advertisement

    இதனால் நேற்று இரவு வழக்கம் போல குடி போதையில் இருந்த குமார், ரம்யாவுடன் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி ரம்யா கணவரை வீட்டில் இருந்த வெட்டுக் கத்தியால் கழுத்து பகுதியில் பலமாக வெட்டியுள்ளார். இதில் கழுத்து பகுதியில் வெட்டுபட்டு படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில், ரம்யா வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் கணவனை கொலை செய்ததாக கூறி சரணடைந்துள்ளார். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு நிலையில் சரணடைந்த ரம்யாவிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Advertisement

    முன்னதாக மூன்று நாட்கள் முன்பு இதே வாணியம்பாடி அருகே பணத்துக்காக கட்டிய மனைவியை, மருமகனுடன் சேர்ந்து கொலை செய்த கணவனை போலீஸார் கைது செய்திருந்தார்கள். அந்த சம்பவம் பற்றியும் விரிவாக பார்ப்போம்.

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பாரத் நகர் கல்குவாரி ஒன்று செயல்பாட்டில் இல்லாமல் மூடப்பட்ட நிலையில் இருக்கிறது. இந்த கல்குவாரியில் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். அவர்கள் உடனே போலீசுக்கு தகவல் தந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி கிராமிய காவல்நிலைய போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் உடலை மீட்க தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடினார்கள். அவர்களின் உதவியுடன் சடலத்தை மீட்ட போலீசார், அப்பெண்ணின் உடலை பார்த்தனர். அவருக்கு காயங்கள் பல இடங்களில் இருந்தது. அவரது உடலை கல்லை கட்டி வீசி கல்குவாரி குட்டையில் வீசி சென்றிருந்தது தெரியவந்தது.

    Advertisement

    தொடர்ந்து, அப்பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பதிவு செய்த வாணியம்பாடி கிராமிய காவல்நிலைய போலீஸார், குவாரியில் மர்மமான முறையில் இறந்துக் கிடந்த பெண் யார்? அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அவர்களின் விசாரணையில் இறந்து கிடந்த அந்த பெண், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அடுத்த வெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வளையல் வியாபாரி சசிகலா என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    சசிகலாவை, அவரது கணவன் அசோகன் மற்றும் மருமகன் அஸ்லாம் ஆகியோர் சிலருடன் இணைந்து கொலை செய்துவிட்டு சுமார் 100 கிமீ வாகனத்தில் கொண்டு வந்து, திருப்பத்தூரில் உள்ள செயல்படாத கல்குவாரியில் வீசிவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.

    Advertisement

    சொத்துகள் எல்லாம் சசிகலா பெயரில் உள்ள நிலையில், சமீபத்தில் அசோகனுக்கும், மருமகன் அஸ்லாமுக்கும் பணம் தேவைப்பட்டுள்ளது. அப்போது சசிகலா பணம் தர மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அவரை கொலைச் செய்து, போலீசார் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக கல்லைக் கட்டி தண்ணீரில் தூக்கி விட்டுச் சென்றுள்ளார்களாம். எனினும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சசிகலாவை காணவில்லை என கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் போலீசில் பொய் புகாரும் அளித்திருக்கின்றனர். இந்த சூழலில்தான் போலீஸாரின் தீவிர விசாரணையில் கணவர் அசோகன் மற்றும் மருமகன் அஸ்லாம் ஆகியோர் இணைந்து சசிகலாவை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. தற்போது இருவரையும் கைது செய்த போலீஸார், கொலைக்கு உடந்தையாக இருந்த மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    English Summary

    Ramya (35) and her husband Kumar (40) were residents of Kolla Kuppam near Vaniyambadi in Tirupathur district; the couple had been married for 15 years and had two daughters and a son. Kumar used to pick fights due to his addiction to alcohol. Ramya killed him and subsequently surrendered to the police.