விழுப்புரம் கோட்டத்தில் 136 புறநகர் பேருந்து சேவை நிறுத்தம்! அப்ப என்னத்துக்கு மகளிர் பயணம்?

  • விழுப்புரம்: விழுப்புரம் கோட்டத்தில் குறைந்த வருவாய் ஈட்டிய 136 புறநகர் பேருந்துகளின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதால் ஏழை, எளிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இருக்கும் பேருந்துகளே போதவில்லை என கூறி வரும் நிலையில் இது போல் ஓடும் பேருந்துகளையும் நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம் என கேட்கிறார்கள்.

    Advertisement

    தமிழக அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 6 மண்டலங்கள் உள்ளன.

    Advertisement

    இந்த மண்டலங்களுக்குட்பட்ட 10 மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம், 6 மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்துக்கழகத்தின் வருவாய் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கிலும், அதிக சர்வீஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்களிலும், தனியார் பஸ் போக்குவ ரத்து இல்லாத வழித்தடங்களிலும் குறைந்த வருவாய் ஈட்டும் பஸ் சேவைகளை தேர்வு செய்து அவற்றை ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய போக்குவரத்து குறைவாக காணப்படும் வார நாட்களில் தற்காலிகமாக நிறுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் வருவாய் அதிகரிப்பதுடன், டீசல் செலவினமும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அதன் அடிப்படையில் அனைத்து மண்டலங்களில் இருந்தும் பஸ்களை நிறுத்தம் செய்ய முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்த வருவாய் ஈட்டும் பஸ் சேவைகள் ஆய்வு செய்யப்பட்டு போக்குவரத்து குறைவாக காணப்படும் வார நாட்களில் தற்காலிகமாக நிறுத்தம் செய்ய முன்மொழிவுகள் பெறப்பட்டன.

    இதன்படி விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 26 பஸ்களும், கடலூர் மண்டலத்தில் 28 பஸ்களும், திருவண்ணாமலை மண்டலத்தில் 34 பஸ்களும், வேலூர் மண்டலத்தில் 23 பஸ்களும், காஞ்சிபுரம் மண்டலத்தில் 15 பஸ்களும், திருவள்ளூர் மண்டலத்தில் 10 பஸ்களும் ஆக மொத்தம் 136 புறநகர் பஸ் சேவைகள் (598 முறை இயக்குதல்) நிர்ணயிக்கப்பட்ட கிலோ மீட்டரில் 71,971 கி.மீ. இயக்கத்தை போக்குவரத்து குறைவான வார நாட்களான செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் குறைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    Advertisement

    இது போல் பேருந்து நிறுத்தத்தால் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் அதிகரிக்கப்படும். டீசல் செலவு குறைக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் சொன்னாலும் இந்த பேருந்து சேவைகளை நம்பி வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

    கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் நேரத்தில் போதிய பேருந்து இல்லாததால் மாணவர்கள் கிடைக்கும் பேருந்துகளில் தொங்கிக் கொண்டு செல்லும் அவலம் உள்ளது.

    அது போல் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அலுவலக பணியாளர்கள், சிறு, குறு வியாபாரிகளும் பேருந்து இல்லாமல் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படும். இதைவிட உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் மருத்துவமனைக்குச் செல்வதில் சிரமம் ஏற்படும்.

    Advertisement

    பேருந்துகள் குறைப்பால், ஷேர் ஆட்டோ, தனியார் பேருந்துகள், வாடகை கார்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டியிருக்கும். இதனால் மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை பயன்படுத்த முடியாமல் ஏழை எளிய குடும்பங்களுக்கு நிதிச் சுமை ஏற்படும். இத்தனை கஷ்டங்களை அந்த மக்கள் சந்திக்க நேரிடும் என்பதால் 136 பேருந்துகள் குறைப்பை போக்குவரத்துக் கழகம் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    English Summary

    136 bus services stopped as there was no huge income from those buses at Villupuram. Poor people suffered heavily.