ADMK: செஞ்சி சிறுமி எங்கே? 14 நாட்களாகியும் துப்பு துலங்கலை! அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

  • செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தில் காணாமல் போன 7 வயது சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்காததை கண்டித்து அதிமுக நாளை (அக்டோபர் 26) ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

    Advertisement

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா (7)காணாமல் போனார். இது தொடர்பாக சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 13 நாட்களாகியும் சிறுமியின் நிலை தெரியவில்லை.

    Advertisement

    இந்த வழக்கில் சத்தியமங்கலம் போலீஸார் விசாரித்தும் எந்த துப்பும் கிடைக்காத நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டிருந்தார்.

    அந்த வகையில் இந்த வழக்கை கடந்த 22 ஆம் தேதி முதல் சிபிசிஐடி டிஜிபி கீதா தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் சிறுமியின் தாயிடம் இன்று 4-வது நாளாக விசாரணை நடத்தினர். நேற்றைய தினம் விசாரணையில் சிறுமியின் தாயையும் பாட்டியையும் சிறுமி படித்த பள்ளிக்கு அழைத்து சென்று 6 மணி நேரம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியிருந்தனர்.

    Advertisement

    சிறுமி மாயமாகி 14 நாட்கள் ஆன நிலையில் சிபிசிஐடி போலீஸார் எந்த தடயமும் கிடைக்காமல் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் சிறுமி எங்கோ உயிருடன் மறைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்று மட்டும் அவர்கள் நம்பியுள்ளனர்.

    இந்த நிலையில் தவெக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகவும் சிறுவர்கள் காணாமல் போவதாகவும் அதிமுக குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

    நாளை ஆலம்பூண்டி கிராமத்தில் விழுப்புரம் அதிமுக மாவட்டச் செயலாளர் பசுபதி (சி.வி.சண்முகம் நீக்கப்பட்டு புதிதாக நியமிக்கப்பட்டவர்) தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

    செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்! டவுசர் அணிந்த இரு முகமூடி கொள்ளையர்களுக்கு தொடர்பா? திடுக் தகவல்கள்
    Advertisement

    முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கும் சமூக நீதியும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதையே சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன.

    •சாத்தான்குளம் அருகே பெண் ஒருவரை வீடு புகுந்து மர்மநபர் வெட்டிக் கொலை செய்துள்ளதாகவும்,

    •கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே Lift கேட்டு சென்ற சிறுவன் மாயமானதாகவும்,

    •கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஜாதிய பாகுபாட்டால் மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும்

    வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.

    தமிழ்நாட்டில் நடக்கும் கொலைகளை எல்லாம் பார்த்தால்,
    விஜய் ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகள் எல்லாம் தங்களை "#LeoDas"-ஆக நினைத்துக் கொண்டு வலம் வருகின்றனரோ என்று தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

    Advertisement

    கொள்கை (?), கூட்டணி என எல்லாவற்றிலும் "சமூகநீதி" என்று பெயர் வைக்கும் இந்த ரீல்ஸ் முதல்வரின் ஆட்சியில் ஜாதிய பாகுபாட்டால் ஒரு மாணவன் உயிரிழந்து இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மேடைகளில் பேசும் டயலாக் எல்லாம் இப்போது எங்கே போனது?

    செஞ்சி சிறுமி மாயம்! சிபிசிஐடி விசாரணையில் புதிய நம்பிக்கை.. சிறுமி உயிருடன் இருக்க வாய்ப்பு?

    ஸ்ரீபெரும்புதூர், செஞ்சி சிறுமிகளைத் தொடர்ந்து, ஊத்தங்கரை சிறுவனைக் காணவில்லை. ஸ்ரீபெரும்புதூர் சிறுமி மீட்கப்பட்ட நிலையில், செஞ்சி சிறுமியை இன்னும் இந்த அரசு கண்டுபிடிக்கவில்லை. தொடர்ந்து சிறுவர்கள் காணாமல் போவது பெற்றோர்களை என்ன வேதனைக்கு உள்ளாக்கும் என்பதெல்லாம் இந்த முதல்வருக்கு கொஞ்சமாவது புரியுமா?

    Advertisement

    இது ஒரு Pattern-ஆக நடப்பது போன்ற சந்தேகம் கூட இந்த அரசுக்கு வரவில்லையா?

    சாத்தான்குளம் மற்றும் கோவை வழக்குகளில் தொடர்புள்ளோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும்,

    மாயமான சிறுவர்களை மீட்டு, இந்த விவகாரத்தை தீவிரமாக அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English Summary

    ADMK is conducting a protest tomorrow in Alampoondi village against Gingee girl missing case, as there is no clue even after she missed 14 days ago.