பாண்டி ரிசார்ட்.. துபாய் சொத்து! அதிமுகவில் ஆட்டைய போட்ட சிவி சண்முகம்! பரபர புகார் சொன்ன ர.ர.!

  • விழுப்புரம்: தவெகவிற்கு செல்ல தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை புதுச்சேரி ரிசார்ட்டில் சிவி சண்முகம் தங்க வைத்ததாகவும், சி.வி.சண்முகம் அமைச்சராக இருந்த காலத்தில் அளவுக்கு மீறிய சொத்துகள் சேர்த்ததாகவும், அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் முதலீடுகள் செய்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

    Advertisement

    விழுப்புரத்தில் அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று சி.வி.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ் பாபு, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான பசுபதி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

    Advertisement

    இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட செயலாளர் பசுபதி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர் சுரேஷ் பாபு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    பசுபதி

    அப்போது பேசிய அவர்," கட்சிக்கு எதிராகவும், கழக பொதுச்செயலாளருக்கு எதிராகவும் செயல்பட்டதால் சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, என்னை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளார். அதன் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக மிகுந்த எழுச்சியுடன் செயல்பட்டு வருகிறது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு தினமும் 500 முதல் 800-க்கும் மேற்பட்டோர் மாவட்ட அலுவலகத்திற்கு வந்து கட்சியில் இணைந்து வருகின்றனர்.

    Advertisement

    விழுப்புரம் அதிமுக

    சென்னையில் நடைபெற்ற கட்சியின் ஆய்வுக் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பெற்றோம். இந்த வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்கள் மூலம் தொடர்ந்து என்னையும், கழக பொதுச்செயலாளரையும் குறிவைத்து அவதூறு பரப்பி வருகின்றனர். சுரேஷ் பாபு தன்னை குறித்து முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை.

    2001 சட்டப்பேரவைத் தேர்தல்

    சுரேஷ் பாபு கடந்த காலங்களில் திமுக தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். தேர்தல் காலங்களில் பணம் பெற்றுக்கொண்டு கட்சிக்கு எதிராக செயல்பட்டார். 2001 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வீட்டிற்குச் சென்று பணம் பெற்றார். பின்னர் அதிமுக வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் சுரேஷ் பாபு தான்.

    Advertisement

    சி.வி. சண்முகம்

    தன்னை அரசியல் ரீதியாக தொடர்ந்து புறக்கணிக்க சி.வி.சண்முகம் முயன்றார். தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசவிடாமல் தடுத்தது, முக்கிய நிகழ்ச்சிகளில் அவமானப்படுத்தினார். எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து பேசிய பிறகும் தற்போது அவருக்கு ஆதரவாக சிலர் செயல்படுவது அரசியல் சந்தர்ப்பவாதம். மேலும், சி.வி.சண்முகம் அமைச்சராக இருந்த காலத்தில் அளவுக்கு மீறிய சொத்துகள் சேர்த்தார்.

    எடப்பாடி பழனிசாமி

    அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் முதலீடுகள் செய்துள்ளனர். துபாயில் வணிக முதலீடுகள் இருக்கிறது. குற்றம்சாட்டினார். இதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும். தவெகவில் இனைய பாண்டியில் அறைகள் ஏற்பாடு செய்து எம்.எல்.ஏ.க்களை அங்கு தங்க வைத்தது சி.வி. சண்முகமும், அவரது சகோதரர் சி.வி. ராதாகிருஷ்ணனும் தான். எம்.எல்.ஏ.க்களை அங்கு அழைத்து வந்து தங்க வைத்ததற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே செய்தனர். ஆனால் தற்போது அந்த ஏற்பாட்டை எடப்பாடி பழனிசாமி செய்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. அந்த விவகாரம் குறித்து விசாரித்தால் உண்மை வெளிவரும்" என்றார்.

    English Summary

    AIADMK district secretary Pasupathi accuses CV Shanmugam of amassing assets and plotting MLA defections, escalating the party's internal feud.