விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரின் 7 வயது குழந்தை தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்தக் குழந்தையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சியில் ஏற்கனவே ஒரு சிறுமியைக் காணவில்லை. 20 நாட்களைக் கடந்த நிலையில், குழந்தை எங்கே சென்றது, யாரிடம் உள்ளது, குழந்தைக்கு என்ன நடந்தது என்பது குறித்து தகவல்கள் இல்லை. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சூழலில் புதிதாக ஒரு சிறுமியைக் சிலர் கடத்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது 7 வயது மகள் ஆஷிகா, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் சிறுமி ஆஷிகா, கிராமத்தில் உள்ள பெட்டிக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சிறுமியைக் கடத்த முயற்சி செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டு அலறியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்ததைக் கண்ட மர்ம நபர்கள், சிறுமியைச் சாலையில் விட்டுவிட்டு ஆட்டோவில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் செஞ்சி போலீசார் ஜெயங்கொண்டான் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கடந்த அக்டோபர் 11-ம் தேதி ஆலம்பூண்டி அருகே தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹோமலதா அதிகாலையில் மாயமானார். இன்றுடன் 30 நாட்கள் ஆகியும் அவர் குறித்து எந்தவிதத் தடயமும் கிடைக்காததால், சிபிசிஐடி போலீசார் அந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் ஜெயங்கொண்டான் கிராமத்தில் 7 வயது சிறுமியைக் கடத்த முயன்ற சம்பவம், செஞ்சி பகுதி பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக தற்போது செஞ்சி போலீசார் அந்தக் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பிரதான சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தக் கடத்தல் முயற்சி சம்பவம் குறித்து சிறுமி விவரிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செஞ்சி சிறுமி மாயம்.. தமிழக போலீஸ் கைவிரிச்சாச்சு? சிபிஐயிடம் ஒப்படைங்க! வலுக்கும் போர்க்கொடி!
ஈரான் போர் முடிகிறதா? அதிகாலையே அமெரிக்கா அதிபர் பகிர்ந்த நல்ல விஷயம்