“இந்த வருடம் மட்டும் சிறுமியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது ஏன்?” சிபிசிஐடி விசாரணையில் பரபர ட்விஸ்ட்

  • விழுப்புரம்: 6 வருடங்களாக கொண்டாடப்படாத செஞ்சி சிறுமியின் பிறந்தநாள் இந்த வருடம் மட்டும் ஏன் கொண்டாடப்பட்டது? என சிறுமியின் தாயாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உள்நோக்கம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாளுக்கு ஆடை, கேக், சாக்லேட் வாங்கிய கடைகளில் சிசிடிவி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

    Advertisement

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசித்து வருபவர் வடிவேலு. இவரது மனைவி பவானி. இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் ஹேமாவதி (வயது 7). சிறுமி ஹேமாவதி கடந்த 11 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு அன்று இரவு வீட்டில் பெற்றோருடன் படுத்து தூங்கியுள்ளாள்.

    Advertisement

    மறுநாள் அதிகாலை 5 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது ஹேமாவதியை காணவில்லை. கிராமம் முழுக்க பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டது.

    தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 10 நாட்களாகியும் விசாரணையில் சிறு முன்னேற்றமும் இல்லாத நிலையில் கடந்த 21 ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சிபிசிஐடி எஸ்பி ஜவகர், டிஎஸ்பி கீதா, ஆய்வாளர் ரேவதி ஆகியோர் சிறுமியின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுமியை கண்டுபிடிக்க பல இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    முதலில் சிறுமியின் தாயார் பவானியை மட்டும், அவர்களது வீட்டுக்கு அருகே உள்ள அரசு பள்ளியில் வைத்து சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். சிறுமி காணாமல் போனது தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பி, துருவித் துருவி விசாரித்துள்ளனர். இந்த விசாரணை முழுவதையும் சிபிசிஐடி போலீசார் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.

    செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்! டவுசர் அணிந்த இரு முகமூடி கொள்ளையர்களுக்கு தொடர்பா? திடுக் தகவல்கள்

    அதன் தொடர்ச்சியாக, நேற்று சனிக்கிழமை சிறுமியின் தாய் பவானி மற்றும் தந்தை வடிவேலு ஆகிய இருவரையும், சிறுமி ஹேமலதா படித்த ஆலம்பூண்டி அரசு தொடக்கப் பள்ளிக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

    Advertisement

    அப்போது, 6 வருடங்களாக கொண்டாடப்படாத சிறுமியின் பிறந்தநாள் இந்த வருடம் மட்டும் ஏன் கொண்டாடப்பட்டது? என கேள்வி எழுப்பி விசாரணை நடத்தியுள்ளனர். சிறுமி காணாமல் போன நேரம், சிறுமியைக் கடைசியாகப் பார்த்தது யார், அவர் காணாமல் போனது எப்படி தெரியவந்தது என பல்வேறு கேள்விகளுக்கு பெற்றோரிடம் பதில்களைப் பெற்றுள்ளனர்.

    சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டதாக, எதிர் வீட்டில் வசிக்கும் மஞ்சுளா தெரிவித்த தகவலும் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுவரை சிறுமி ஹேமலதா குறித்த உறுதியான தகவல் கிடைக்காத நிலையில், விசாரணையின் முக்கியக் கட்டமாகப் பெற்றோரிடம் தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Advertisement
    செஞ்சி சிறுமி மாயம்! சிபிசிஐடி விசாரணையில் புதிய நம்பிக்கை.. சிறுமி உயிருடன் இருக்க வாய்ப்பு?

    மேலும், 6 வருடங்களாக ஹேமாவதியின் பிறந்தநாளை கொண்டாடாத நிலையில் இந்த வருடம் மட்டும் ஏன் கொண்டாடப்பட்டது? சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உள்நோக்கம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாளுக்கு ஆடை, கேக், சாக்லேட் வாங்கிய கடைகளில் சிசிடிவி ஆய்வு மேற்கொள்ளவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    பணத்திற்காக பெற்றோரே சிறுமியை விற்று விட்டார்களா? என்ற கோணத்திலும் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சிறுமி காணாமல் போய் 13 நாட்கள் ஆகியுள்ள நிலையில் விரைவில் மாயமான சிறுமி குறித்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    CBCID police have questioned the mother of a young girl as to why her birthday—which had not been celebrated for the past six years—was celebrated this year. They are investigating whether there was any ulterior motive behind the birthday celebration.