எனக்கு இல்லைனா.. யாருக்கும் இல்ல! முன்னாள் மனைவி மீது ஆசிட் ஊற்றிய சைக்கோ! வெலவெலத்த விழுப்புரம்!

  • விழுப்புரம்: விழுப்புரத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான்கு மாதங்களுக்கு முன்பு விவாகரத்தாகியுள்ளது. இந்த நிலையில், அந்த பெண் இன்று சாலையில் நடந்து சென்ற போது பட்டப்பகலில் அவரது முன்னாள் கணவன் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

    Advertisement

    விழுப்புரம் நகர பகுதியான முத்தோப்பு பகுதியை சார்ந்த ராமச்சந்திரன் மற்றும் அன்புராணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கு இடையே கருத்து வேறுபாடின் காரணமாக அடிக்கடி சண்டையிட்டு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    Advertisement

    பின்னர் நீதிமன்றத்தில் நாடி நான்கு மாதங்களுக்கு முன்பு விவகாரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில் மனைவி தனியாக பிள்ளைகளுடன் வசித்து வருவதால் அடிக்கடி ராமச்சந்திரன் மனைவி வீட்டிற்கு சென்று குழந்தைகளை பார்க்கவேண்டும் என சண்டையிடுவது மற்றும் செல்போனில் அழைத்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அன்புராணி இன்று நகரப் பகுதியான திருவிக வீதியில் ஆஞ்சநேயர் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அபோது அன்புராணியை பின் தொடர்ந்து சென்ற முன்னாள் கணவர் ராமச்சந்திரன் தனது கையில் எடுத்து வந்த ஆசிட்டினை பிரிந்து சென்ற மனைவி முகத்தில் வீசிவிட்டு தப்பித்து ஓடியுள்ளார். இதில் ஆசிட் வீச்சின் போது அந்த பெண் மற்றும் அருகில் நடந்து சென்ற கிருஷ்ணமூர்த்தி என்கிற முதியவர் மீதும் ஆசிட் பட்டதால் பாதிக்கப்பட்டனர்.

    Advertisement

    இதனையடுத்து இச்சம்பவம் தகவலறிந்து வந்த நகர போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணையும் முதியவரையிம் மீட்டு அருகிலுள்ள நகராட்சி மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ஆசிட் வீச்சு சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் கணவரை தேடி வருகின்றனர். மேலும் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாக நான்கு மாதங்களுக்கு முன்பு விவாகரத்தான நிலையில் மனைவி இன்று சாலையில் நடந்து சென்ற போது பட்டபகலில் அவர் மீது பிரிந்து சென்ற கணவன் ஆசிட் வீசிய சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    A divorced woman was allegedly attacked with acid by her former husband in broad daylight in Villupuram, leaving her seriously injured.