ஆஹா.. கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க! ஊருக்கு கிளம்பிய சென்னையன்ஸ்! திணறும் நெடுஞ்சாலைகள்!

  • விழுப்புரம்: தீபாவளி தொடர் விடுமுறையால் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி சுங்கச்சாவடியில் நள்ளிரவில் குவிந்த வாகனங்கள் குவிந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சுங்கச்சாவடியில் கூடுதல் வழித்தடம் திறக்கப்பட்டு வாகனங்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்றன.

    Advertisement

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனயடுத்து சென்னையில் உள்ள அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்று வருகின்றனர்.

    Advertisement

    இதன் காரணமாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கி கார், வேன், பேருந்து உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பொதுமக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று நள்ளிரவில் திடீரென ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரே நேரத்தில் செங்குறிச்சி சுங்கச்சாவடிக்கு வந்ததால் சுங்கச்சாவடி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் சாலையிலும் கூடுதலாக ஒரு வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    Advertisement
    20 கிமீ சுற்றளவில் வசிப்பவர்களுக்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்? 1200 மிச்சம்! மத்திய அரசு திட்டம்

    இதே போல வானகரம், போரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை அடுத்து நள்ளிரவில் போலீசார் பணியாற்றி போக்குவரத்தை ஒழுங்கு செய்தனர். இன்று அதிகமான வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுக்கும் என்பதால் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    English Summary

    Diwali travel rush triggers heavy traffic at Sengurichi toll plaza as Chennai residents head to southern Tamil Nadu districts.