உங்க வாய் கூட கோணலா இருக்கு.. விஜய்யை போட்டி போட்டு கொச்சையாக பேசிய திமுக எம்எல்ஏக்கள்

  • கள்ளக்குறிச்சி: சட்டமன்றத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் வைத்த விமர்சனம் சர்ச்சையானது. மிசா குறித்து அவர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சியில் நடந்த போராட்டத்தில் திமுகவின் தற்போதைய எம்எல்ஏவும், முன்னாள் எம்எல்ஏவும் போட்டி போட்டு கொண்டு விஜயை ஒருமையில் கொச்சையாக விமர்சித்தது சர்ச்சையாகியுள்ளது.

    Advertisement

    கள்ளக்குறிச்சியில் தவெக, முதலமைச்சர் விஜயை கண்டித்து திமுக நடத்திய போராட்டத்தில் பேசிய முன்னாள் எம்எல்ஏ உதயசூரியன், "நானும் 5 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளேன். சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும், என்ன பேச கூடாது என்று தவெக சர்கஸ் பார்டிக்கு தெரியாது. அதற்கு இங்கிருக்கும் தாய்மார்கள் தான் காரணம். தேர்தல் பிரச்சாரத்தில் தவெக 6 சிலிண்டர்கள் என்று சொன்னதும் வாயை பிளந்தனர்.

    Advertisement

    ஜனம் ஏமாந்துவிட்டது

    மாதம் ரூ.2,500 மகளிர் உரிமை தொகை, கன்னியாகுமரி முதல் சென்னை வரை பஸ்ஸில் போகலாம் என்று சொன்னதும் 2 நாட்களில் களம் மாறியது. ஏய் நண்பாஸ்.. குட்டிஸ் என்று கூறியதை செல்போனில் பார்த்து வாக்களித்தனர். நாங்கள் முன்பு நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு ஒரு போட்டோகிராபரை அழைத்து வந்து எடுப்பதே பெரிய விஷயமாக இருந்தது. மூலை மூலைக்கு செல்போனை பார்த்து இந்த ஜனம் விசில் பக்கம் சாய்ந்து ஏமாந்துவிட்டது.

    நான் சொல்வதை திருப்பு உரக்க சொல்லுங்க. லண்டனுக்கு போயுள்ள விஜய்க்கு காது கேட்க வேண்டும். அவன் ஒரு ஆள் கூட போயிருக்கான். முதலமைச்சர் இரண்டு பேர் கூட லண்டன் சென்றுள்ளார்" என்றவுடன் கீழ் இருந்த தொண்டர்கள் சில பெயர்களை சொன்னார்கள். அதற்கு உதயசூரியன், "நீங்களாக பெயரை சொல்லாதீங்க. தலைவரின் தியாகத்தை பற்றி மட்டுமே பேச வேண்டும்" என்றார்.

    Advertisement

    உங்க வாய் கூட தான்..

    அதே ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய சிட்டிங் எம்எல்ஏ வசந்தம், "எங்கள் தலைவர் போரா சிறையில் இருந்தது உண்மை தான். முதலமைச்சருக்கு கூட வாய் கோணாலாக உள்ளது. அதை எப்படி ஆச்சு என்பதை என்று என்னால் சொல்ல முடியாது. அதை உங்கள் யுகத்துக்கே விட்டுவிடுகிறன். சட்டமன்றத்தில் நீ பேசிவிட்டு ஓடுகிறாய். நீ பேசிய பேச்சுக்கு எங்கள் தலைவர் பதில் சொல்ல தயாராக உள்ளோம். 5 நிமிடம் மைக் ஆப் செய்யாமல் பேச விடுங்க. நாங்கள் சிறைச்சாலை செல்ல தயாராகவுள்ளோம்" என்றார்.

    English Summary

    DMK leaders Udayasuriyan and sitting MLA Vasantham Karthikeyan launched personal and vulgar attacks against TVK leader Vijay during a protest in Kallakurichi.