தினம் விசாரிப்பதால் மன உளைச்சல்! செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீர்! மூத்த மகளை கல்லூரி அனுப்ப அனுமதி

  • செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி மாயமாகி 22 நாட்களாகியும் எந்த தகவலும் கிடைக்காததால் தாய் பவானி, குழந்தையை எப்படியாவது கண்டுபிடித்துத் தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எங்களை நிறைய டிவி சேனல்கள் பேட்டி எடுக்கிறார்கள். ஆனால் எங்களை பற்றி தப்பு தப்பாக போடுகிறார்கள். இதனால் நாங்கள் டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டோம் என்றே சொல்லிவிட்டோம்.

    Advertisement

    நானே குழந்தையை தூக்கி கொடுத்ததாக போடுகிறார்கள். காசுக்காக குழந்தையை விற்றுவிட்டேன் என்கிறார்கள். குழந்தை காணாமல் போன அன்று இரவு அம்மா அம்மா என சப்தம் கேட்டதால் பக்கத்து பெண் சொன்னார். ஆனால் அவர் போய் பார்த்த போது அங்கு யாருடைய நடமாட்டமும் இல்லை என்றார்.

    செஞ்சி சிறுமி மாயம்.. 22 நாட்களாகியும் முடியல! சுழன்றடிக்கும் யூ டர்ன்.. கேசில் தோற்ற தவெக அரசு

    அது போல் குழந்தை அழுதது என் வீட்டில் வாசலிலேயே கேட்டது என்கிறார்கள். ஆனால் எங்களுக்கு கேட்கவில்லை. என் குழந்தை காணாமல் போய் 22 நாட்கள் ஆகிறது, என் குழந்தையை எப்படியாவது கண்டுபிடித்துத் தர வேண்டும். எங்களால் கூலி வேலைக்கும் செல்ல முடியவில்லை. தினமும் விசாரணை என்பதால் மன உளைச்சலாக இருக்கிறது.

    Advertisement

    எங்களுக்கு ஆதரவாக ஊடகங்களும், சமூக வலைதளங்களில் பொதுமக்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். அதற்கு நன்றி. ஆனால் அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் சிலர் எங்களை பற்றி தவறாக பேசி வருகிறார்கள். பரப்பப்படும் தவறான தகவல்களும், வதந்திகளும் எங்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலையும், உளவியல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

    கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நாங்கள் வேலைக்கு செல்லவில்லை. பசி பட்டினியில் இருக்கிறோம். எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம், எங்கள் குழந்தையை கண்டுபிடித்து கொடுத்தால் போதும்.

    ஓயாத மர்மம்! சட்டென விபூதி குங்குமத்தோடு கேமரா முன் வந்த செஞ்சி சிறுமியின் தாய்! வழக்கில் திருப்பம்?
    Advertisement

    சிபிசிஐடி போலீஸாரும் முடிந்த வரை நிறைய முயற்சி எடுக்கிறார்கள், குழந்தையை கண்டுபிடிக்காமல் இந்த இடத்தை விட்டு போகமாட்டோம் என கூறியிருக்கிறார்கள். அவர்களும் என்ன செய்வார்கள்? துப்பு கிடைத்தால் தானே கண்டுபிடிப்பார்கள்? என்றார்.

    இந்த நிலையில் தனது மகள் கல்லூரிக்கு செல்லவில்லை என அழுததால், அவரை கல்லூரிக்கு அனுப்ப சிபிசிஐடி அனுமதித்தனராம். சிறுமி மாயமாகி 22 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை எந்த தகவலும் கிடைக்காததால் குடும்பத்தினர் கடும் வேதனையில் உள்ளனர். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி (CBCID) பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாததால் குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    English Summary

    Gingee girl case: mother of the girl cries that the investigation gives depression for them. she wants somehow police has to bring her daughter.