Gingee girl: சாமியே சொல்லிடுச்சி! போலீஸ் கொடுத்த நம்பிக்கை! செஞ்சி சிறுமியின் தாய் பவானி!

  • விழுப்புரம்: "சிவன் கோயிலில் பூ போட்டுக் கேட்டதில் என் மகள் உயிருடன் இருப்பதாக உத்தரவு கிடைத்தது" என செஞ்சி சிறுமியின் தாய் பவானி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். செஞ்சி சிறுமி ஹேமலதா மாயமான நிலையில் அவர் ஜோதிடம், அருள்வாக்கு உள்ளிட்ட விஷயங்களை கையில் எடுத்துள்ளார்.

    Advertisement

    செஞ்சி சிறுமி ஹேமலதா காணாமல் போய் 17 நாட்கள் முடிந்துள்ளன. இதுவரை அந்த சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Advertisement

    அந்த வகையில் சிறுமி உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் எங்கு இருக்கிறார் என்பதைதான் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்கள் சிபிசிஐடி. காரணம், சிறுமி இறந்திருந்தால் இந்த 17 நாட்களில் அவரது உடல் உறுப்புகளோ, சடலமோ மீட்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது போல் எதுவும் கிடைக்கவில்லை.

    டிரோன் மூலம் கண்காணிப்பு

    போலீஸார் டிரோன் மூலம் கிணறுகள், கரும்பு தோட்டம், காட்டுப் பகுதிகளில் எல்லாம் தேடிவிட்டனர். இதனால் சிறுமி எங்காவது பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இதை தாய் மறுத்துள்ளார்.

    பணத்துக்காக விற்பனை

    பணத்துக்காக விற்பதென்றால் குழந்தையை எதற்காக நான் பெற்று வளர்க்க வேண்டும்? என கேட்கிறார். போலீஸோ சிபிசிஐடியோ எத்தனை முறை கேட்டாலும் "குழந்தை என்னுடன் தூங்கி கொண்டிருந்தது, ஆனால் அதிகாலையில் காணவில்லை. இதுதான் உண்மை" என தெரிவித்துள்ளார்.

    Advertisement

    குழந்தையின் பெயர்

    மேலும் குழந்தையின் பெயரை வைத்து ஆங்காங்கே அருள்வாக்கு கேட்டது, ஜோதிடம் கேட்டது என்பதில் சிறுமி உயிருடன் இருக்கிறார் என்றுதான் தெரிவித்தார்களாம். அந்த வகையில் செஞ்சியில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் பூ போட்டு கேட்டதில் மகள் உயிருடன் இருப்பதாக வந்திருக்கிறதாம்.

    2, 3, நாட்களில் செய்தி வரும்

    இன்னும் 2, 3 நாட்களில் நல்ல செய்தி வரும் என போலீஸாரும் கூறியுள்ளனர் என மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறாராம் பவானி! இவரது நம்பிக்கை வீண் போகாமல் குழந்தை பத்திரமாக நல்லபடியாக கிடைத்துவிட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக இருக்கிறது.

    Advertisement

    யார் இந்த ஹேமலதா

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி பவானி. இவர்களுக்கு இரு மகள்கள். அவர்களில் இளைய மகள் ஹேமலதா (7).

    பிறந்தநாள் கொண்டாட்டம்

    இவர் கடந்த 11 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடி முடித்துவிட்டு பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலையில் குழந்தையை காணவில்லை. சிறுமியை கண்டுபிடிக்க மாவட்ட காவல் துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    செஞ்சி சிறுமியின் பள்ளியில் முகாமிட்ட சிபிசிஐடி.. சிறுமி உயிரோடு இருக்க வாய்ப்பு? என்ன காரணம்?
    Advertisement

    5 தனிப்படைகள்

    இதனால் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. போலீஸ் டிஎஸ்பிக்கள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமி குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 6 நாட்களாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து 7ஆவது நாளாக நேற்றும் விசாரணை நடத்தப்பட்டது.

    சிபிசிஐடி விசாரணை

    சிறுமி படித்து வந்த ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்று அங்கு இருந்த மாணவ- மாணவிகளின் வருகைப் பதிவேட்டை கைப்பற்றி போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆசிரியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சிறுமியின் செயல்கள், பழக்கவழக்கங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

    Advertisement
    செஞ்சி சிறுமி பெங்களூரில் இருக்கிறாரா? பாய்ந்த சிபிசிஐடி டீம்.. தந்தையின் உறவினர்களிடம் துருவல்?

    திருவண்ணாமலை சகோதரி

    இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் சிறுமியின் சகோதரி படித்து வரும் தனியார் கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தினர். சிறுமி மாயமானது குறித்து அந்த சகோதரியின் தோழிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    எங்கே சென்றாள்?

    பிறந்தநாள் கொண்டாடப்பட்ட அன்று சிறுமி, தனது தாய், தந்தை, பாட்டியுடன்தான் ஒரே அறையில் தூங்கினாராம். சிறுமியாக எழுந்து எங்காவது வெளியே சென்றாளா, இல்லை கதவு திறந்திருந்ததால், யாரேனும் கடத்தி சென்றுவிட்டனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    English Summary

    Gingee girl missing: Mother Bhavani says that her daughter will be alive and she will return home just in 2 or 3 days.