செஞ்சி சிறுமி வீட்டின் அருகே 12.45க்கு நடந்த சம்பவம்.. புதிய ஆதாரத்தை நோக்கி பாயும் சிபிசிஐடி!

  • விழுப்புரம்: செஞ்சி சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை. இதற்கிடையே அன்றைய தினம் இரவு 12.45 மணிக்கு சிறுமி வீட்டின் அருகே சென்ற வில்லுப்பாட்டு குழுவினரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்களிடம் எதாவது தகவல் கிடைக்குமா என்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்,

    Advertisement

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சிறுமி காணாமல் போய் 25 நாட்களை கடந்தும் இதுவரை எந்த உறுதியான தடயமும் கிடைக்காத நிலையில், இது மாநிலம் முழுக்க கவனிக்கப்படும் வழக்காக மாறியுள்ளது.

    Advertisement

    சிபிசிஐடி போலீசார்

    இதற்கிடையே சிபிசிஐடி போலீசார் இப்போது சம்பவம் நடந்த நள்ளிரவில் அவரது வீட்டின் அருகே சென்ற வாகனங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். குறிப்பாக சிறுமி மாயமான நாளில் நடுப்பட்டு கிராமத்தை சேர்ந்த வில்லுப்பாட்டு குழுவினரிடம் எஸ்பி வேல்முருகன் தலைமையிலான அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீவிர விசாரணை

    வள்ளலார் சன்மார்க்க சங்கம் சார்பில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி 20க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த குழுவினர் சம்பவத்தன்று சென்ற பாதை, அவர்களுடன் பயணித்தவர்கள், வாகனங்கள் சென்ற நேரம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சிறுமி மாயமானது தொடர்பாக ஏற்கெனவே அவரது பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் என பல்வேறு தரப்பினரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது சம்பவம் நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் பயணித்தவர்களின் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

    Advertisement
    செஞ்சி சிறுமி மாயமான வழக்கு.. ஆடு மேய்க்கும் அரவிந்த்திடம் 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை!

    12.45 மணிக்கு

    சிறுமியின் பிறந்தநாளான அக்டோபர் 11ஆம் தேதி நள்ளிரவு சுமார் 12:45 மணியளவில், அவரது வீட்டின் முன்பாக உள்ள சாலையில் வில்லுப்பாட்டு குழுவினரின் வாகனங்கள் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கண்டாச்சிபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு, அவர்கள் டாடா ஏஸ் மினி வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் அந்த வழியாக சென்றுள்ளனர்.

    அந்த வாகனங்கள் சிறுமியின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டனவா? யாராவது அப்பகுதியில் இறங்கி நடமாடினார்களா? அப்போது ஏதேனும் அசாதாரணமான சம்பவம் நடந்ததா? என்பது உள்ளிட்ட கோணங்களில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    Advertisement

    25 நாட்களாக நீடிக்கும் மர்மம்

    ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் மகளான ஹேமலதா, இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அக்டோபர் 11ஆம் தேதி தனது ஏழாவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய சிறுமி, இரவில் பெற்றோருடன் வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள் அக்டோபர் 12ஆம் தேதி அதிகாலையில் எழுந்து பார்த்தபோது சிறுமியை காணவில்லை.

    செஞ்சி சிறுமி மாயம்.. உளவுத்துறையை களமிறக்கிய விஜய்.. உள்ளே புகுந்த OCIU, SBCID! காட்சி மாறுது

    முதலில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். அருகே உள்ள இடங்களில் தேடியும் சிறுமி குறித்த தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து அக்டோபர் 21ஆம் தேதி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதுவரை சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுமார் 600 செல்போன் அழைப்பு பதிவுகள் பரிசோதிக்கப்பட்டது. இதற்கிடையே நாமக்கல், புவனகிரி பகுதிகளில் சிறுமியை பார்த்ததாக கூறப்பட்ட தகவல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

    English Summary

    CBCID is intensifying its investigation into the disappearance of seven-year-old Hemalatha from Villupuram district(செஞ்சி சிறுமி மாயமான வழக்கு): Gingee girl Missing Case latest news in tamil.