Gingee Bhavani: வீடு வராத செஞ்சி சிறுமி! சிபிசிஐடி விசாரணைக்கு மத்தியில் தாய் தினமும் செல்லும் இடம்!

  • செஞ்சி: செஞ்சி அருகே சிறுமி மாயமாகி 17 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரது தாய் பவானி, அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தினமும் கற்பூரம் ஏற்றி கண்ணீர் மல்க வழிபாடு நடத்துவது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த, சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலம்பூண்டி குளக்கரை தெருவை சேர்ந்தவர்கள் வடிவேலு - பவானி தம்பதி. இவர்களது இரண்டாவது மகள் ஹேமலதா ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    Advertisement

    கடந்த அக்டோபர் 11-ம் தேதி தனது 7-வது பிறந்தநாளை கொண்டாடிய சிறுமி, அன்று இரவு பெற்றோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 3 மணியளவில் மாயமானதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 தனிப்படைகள் அமைத்து தேடியும், எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த 21-ம் தேதி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

    சிபிசிஐடி டிஎஸ்பிகள் கீதா மற்றும் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை தற்காலிக விசாரணை மையமாக மாற்றியுள்ளனர்.

    Advertisement

    பள்ளியின் கதவுகளை மூடிக் கொண்டு, உள்ளே யாரையும் அனுமதிக்காமல் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமியின் தாயிடம் தனியாக விசாரணை மேற்கொண்ட நிலையில் சிறுமியின் பாட்டி சாந்தி, பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, பல மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

    சிறுமி காணாமல் போன இரவு நடந்தது என்ன, வீட்டில் யார்-யார் இருந்தனர், சிறுமியின் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் சிறுமியின் அக்காவுக்கு பார்த்து வைத்த மாப்பிள்ளை வீட்டாரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாம்.

    சிறுமியின் அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையின் தம்பிதான், கடந்த 11 ஆம் தேதி சிறுமிக்கு கேக் வாங்கி கொண்டு வந்தாராம். இதனால் அவர்களையும் பள்ளிக்கு வரவழைத்த சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

    Advertisement
    செஞ்சி சிறுமி கேசில் விஜய் அரசு தோல்வி! மாயமாகி 17 நாட்கள்.. ஒரு குழந்தையைக் கூட மீட்க முடியாதா?

    இந்த நிலையில் சிறுமி உயிருடன் இருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவிக்கிறார்கள். அவர் கொல்லப்பட்டிருந்தால் இந்நேரம் அவரது உடலோ உடல் பாகங்களோ கிடைத்திருக்கும். 17 நாட்களாகியும் எதுவும் கிடைக்கவில்லை என்கிற போது அவர் எங்கோ பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார் என சிபிசிஐடி சந்தேகிக்கிறார்கள்.

    இந்த நிலையில் சிறுமியின் தாய் பவானியும் தனது மகள் உயிருடன் இருப்பதாகவே நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். 17 நாட்களாகியும் தனது மகள் குறித்தும் எந்த தகவலும் தெரியாததால் பிள்ளையார் கோயிலில் கற்பூரம் ஏற்றி தினமும் வழிபாடு நடத்தி வருகிறாராம்.

    Advertisement
    Gingee girl: சாமியே சொல்லிடுச்சி! போலீஸ் கொடுத்த நம்பிக்கை! செஞ்சி சிறுமியின் தாய் பவானி!

    தனது மகள் விரைவில் பத்திரமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, தினந்தோறும் வீட்டின் அருகே உள்ள விநாயகர் கோவிலில் கற்பூரம் ஏற்றி வைத்து சாமி தரிசனம் செய்து வருவது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Gingee girl missing: After 17 days there will be no clue about her whereabouts. So minor's mother Bhavani prays daily at Vinayagar temple by lighting camphor.