செஞ்சி சிறுமி தீபாவளிக்குள் வந்துவிடுவாரா? புதுத் துணி வாங்கி கண்ணீருடன் காத்திருக்கும் தாய் பவானி

  • விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காணாமல் போன 7 வயது சிறுமி ஹேமலதா தீபாவளி பண்டிகைக்குள் வீட்டுக்கு வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையுடன் புது துணி எடுத்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறார் தாய் பவானி!

    Advertisement

    செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தில் சிறுமி காணாமல் போய் 23 நாட்களாகிவிட்டன. முதலில் சத்தியமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு எந்த துப்பும் கிடைக்காததால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு கடந்த 21 ஆம் தேதி முதல் மாற்றப்பட்டது.

    Advertisement

    அன்று முதல் சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் கீதா, வேல்முருகன் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சிறுமி குறித்து அவரது தாய், தந்தை, பாட்டி, மூத்த சகோதரி, மூத்த சகோதரிக்கு பார்த்து வைத்த மாப்பிள்ளை, அவரது தம்பி, அவரது குடும்பத்தினர் என நிறைய பேரை அவர்கள் விசாரித்துள்ளனர்.

    ஆலம்பூண்டி பள்ளி

    சிறுமி படித்த ஆலம்பூண்டி ஊராட்சி தொடக்க பள்ளியில் முகாமிட்டு சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது போல் சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜதுரை, உள்ளூர் குற்றவாளிகள், வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோரிடம் கூட அந்த சிறுமி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் விடைதான் கிடைக்கவில்லை.

    Advertisement
    ஓயாத மர்மம்! சட்டென விபூதி குங்குமத்தோடு கேமரா முன் வந்த செஞ்சி சிறுமியின் தாய்! வழக்கில் திருப்பம்?

    உயிருடன் இருக்கும் சிறுமி

    சிபிசிஐடி போலீஸார் என்னென்ன கோணத்திலோ விசாரித்து பார்க்கிறார்கள். ஆனாலும் துப்பு கிடைத்தபாடில்லை. அந்த சிறுமி கொலையாகியிருக்கவோ இறந்திருக்கவோ வாய்ப்பில்லை என்றுதான் சிபிசிஐடி போலீஸார் சொல்கிறார்கள். அப்படி ஏதேனும் நடந்திருந்தால் இந்த நேரம் அவரது உடலோ அல்லது உடல் உறுப்புகளோ கிடைத்திருக்கும்.

    சிறுமியின் தாய் மீது சந்தேகம்?

    இந்த நிலையில் சிறுமி தாயே அந்த குழந்தையை விற்றுவிட்டு உண்மையை மறைக்கிறார் என சொல்லப்படுகிறது. அது போல் சிறுமியை பெங்களூரில் உள்ள தனது உறவினர்களுக்கு விற்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் தாய் பவானியோ அப்படியெல்லாம் இல்லை என கூறி கண்ணீர் வடிக்கிறார்கள்.

    Advertisement

    காட்டுக்குள் விசாரணை

    "என் புள்ளய நானே எதுக்கு தூக்கி கொடுக்க போறேன், அப்படின்னா பொறந்ததுமே தூக்கி கொடுத்திருக்க மாட்டேனா? ஏன் இப்படி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறீர்கள்?" என்கிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் கூட சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜதுரையின் நண்பர் அரவிந்திடம் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    செஞ்சி சிறுமி மாயம்.. 22 நாட்களாகியும் முடியல! சுழன்றடிக்கும் யூ டர்ன்.. கேசில் தோற்ற தவெக அரசு

    சிபிசிஐடி விசாரணை

    சிறுமியின் சகோதரிக்கு பார்த்து வைத்த மாப்பிள்ளையின் தம்பிதான் சிறுமியின் பிறந்தநாளுக்கு கேக் வாங்கி கொண்டு வந்தாராம். அவரிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் கடத்தப்பட்ட நாளில் அம்மா அம்மா என சிறுமியின் அழுகுரல் கேட்டதாக பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் சொல்கிறார்.

    Advertisement

    அம்மா அம்மா கேட்ட குரல்

    இயற்கை உபாதை கழிக்க எழுந்த போது அவ்வாறு சப்தம் கேட்டு பார்த்ததில் யாருடைய நடமாட்டமும் இல்லை என்கிறார். இதனால் சிபிசிஐடி போலீஸார் குழம்பியுள்ளனர். சிறுமியின் தாயோ தனது குழந்தை எப்படியாவது கிடைத்துவிட வேண்டும் என விநாயகர் கோயிலில் தினமும் வந்து கற்பூரம் ஏற்றி வழிபடுகிறார்.

    தீபாவளி துணி

    அது போல் சிறுமியின் பெயரை வைத்து ஜாதகம் பார்த்துள்ளார். அதிலும் சிறுமிக்கு ஆயுள் கெட்டி என்கிறார்களாம். சிபிசிஐடி போலீஸாரும் குழந்தையை கண்டுபிடித்துத் தராமல் ஊரைவிட்டு செல்ல மாட்டோம் என உறுதியளித்துள்ளனராம். இதனால் தீபாவளி பண்டிகைக்குள் எப்படியும் சிறுமி வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் தாய் பவானி புதுத் துணி வாங்கி வைத்துவிட்டு கண்ணீருடன் ஹேமலதா வந்ததும் அவரை வாரி அணைத்து முத்தமிட காத்திருக்கிறார்!

    English Summary

    Gingee girl missing case: Bhavani buys new clothes with tears for Hemalatha for Diwali celebration.