செஞ்சி: செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் "தெருவிளக்கு எரியாததால்தான் குழந்தை காணாமல் போனாரா?" என பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பி ஊராட்சி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், முழுவதும் இன்று நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஊராட்சிச் செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். கூட்டத்தின் தொடக்கத்திலேயே தூய்மை பணியாளர்களை வைத்து கூட்டம் நடத்தப்படுவதாக கூறி அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டன. அப்போது மின்சார பராமரிப்பு மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு செலவுக்காக 2 லட்சம் ரூபாய் எழுதப்பட்டிருப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். "கணக்கில் மட்டும் 2 லட்ச ரூபாய் கரண்ட் பில், பராமரிப்பு செலவு என எழுதி இருக்கிறீர்கள். ஆனால் ஊரில் பாதிக்கு மேல் தெருவிளக்குகள் எரியவில்லை. பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து லைட்டு போட்டிருந்தால் கூட போதும், தெரு வெளிச்சமாக இருந்திருக்கும்" என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மேலும், சமீபத்தில் அதே கிராமத்தில் 7 வயது சிறுமி மாயமான சம்பவத்தை சுட்டிக் காட்டிய பொதுமக்கள், "இரவு நேரத்தில் தெருவிளக்கு எரியாததுதான் குழந்தை ஹேமலதா காணாமல் போனதற்கு காரணம். லைட் மட்டும் ஒழுங்காக எரிந்திருந்தால் இந்த குழந்தை காணாமல் போயிருக்குமா?" என ஊராட்சி செயலாளர் ஏழுமலையிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் இந்த திடீர் கேள்வியால் கிராம சபை கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. ஊராட்சிச் செயலாளர் சமாதானம் செய்ய முயன்றும் பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் கூட்டம் சிறிது நேரம் பாதியில் நின்றது. தெருவிளக்கு பராமரிப்பில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகவும், உடனடியாக அனைத்து தெருவிளக்குகளையும் சரி செய்ய வேண்டும் எனவும், காணாமல் போன குழந்தையை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி பவானி. இவர்களுக்கு இரு மகள்கள். அவர்களில் இளைய மகள் ஹேமலதா (7). இவர் கடந்த 12 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடி முடித்துவிட்டு பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலையில் குழந்தையை காணவில்லை. சிறுமியை கண்டுபிடிக்க மாவட்ட காவல் துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. போலீஸ் டிஎஸ்பிக்கள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமி குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. சிறுமி படித்து வந்த ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்று அங்கு இருந்த மாணவ- மாணவிகளின் வருகைப் பதிவேட்டை கைப்பற்றி போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆசிரியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சிறுமியின் செயல்கள், பழக்கவழக்கங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் சிறுமியின் சகோதரி படித்து வரும் தனியார் கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தினர். சிறுமி மாயமானது குறித்து அந்த சகோதரியின் தோழிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். மேலும் சிறுமியின் கிராமத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள மேல்மலையனூரில் கூட சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். அது போல் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள வடமாநில தொழிலாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை உயிருடன் இருப்பதாகவும் எங்கோ யாரோ மறைத்து வைத்திருப்பதாகவும் சிபிசிஐடி போலீஸார் கருதுகிறார்கள். இந்த சிறுமி கிடைத்துவிட வேண்டும் என அவரது குடும்பத்தினரும் கிராம மக்களும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.வரவு செலவு
2 லட்சம் ரூபாய்க்கு கரன்ட் பில்லா?
செஞ்சி சிறுமி வழக்கில் ட்விஸ்ட்.. அக்காவிற்கு பார்த்த மாப்பிள்ளை யார்? தம்பி பக்கம் திரும்பிய CBCID
7 வயது சிறுமி
கிராம சபை கூட்டம்
செஞ்சி சிறுமியின் தாய் செய்த செயல்.. பார்த்ததும் அப்படியே ஸ்டன் ஆன கிராமம்.. என்னங்க நடக்குது?
தெருவிளக்கு பராமரிப்பு
நடந்தது என்ன?
செஞ்சி சிறுமி கிடைக்கல.. அன்று இரவு 12 மணி நேரம் எரிந்த செங்கல் சூளை.. காட்டில் இறங்கிய சிபிசிஐடி!
சிபிசிஐடி விசாரணை