விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா மாயமான சம்பவம் 28 நாட்களைக் கடந்து தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. நள்ளிரவில் தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை திறந்திருந்த வாசல் வழியே மாயமானது முதல், இன்று வரை ஒரு துப்பும் சிக்காமல் சிபிசிஐடி மற்றும் சிறப்பு உளவு அமைப்புகள் (OCIU, SBCID) திணறி வருகின்றன.
காடுகள், கிணறுகள், சுடுகாடுகள், ரவுடி ராஜதுரை, அரவிந்த், 14 நேஷனல் பெர்மிட் லாரிகள், நாமக்கல் கோவில் சிசிடிவி எனப் பல முனைகளில் விசாரணை சுழன்றடித்தாலும் விடை கிடைக்கவில்லை. ஒரு குழந்தை காணாமல் போவதும், அதனைத் தொடர்ந்து பல வாரங்களாக நீடிக்கும் மர்மமும் தமிழகத்திற்கு இது முதல் முறையல்ல.
கடந்த 50 ஆண்டு கால தமிழகக் குற்ற வரலாற்றில் ஒட்டுமொத்த மாநிலத்தையே உறைய வைத்து, பெரும் சட்டம் ஒழுங்கு விவாதங்களைக் கிளப்பிய 5 முக்கிய சிறுமிகள் கடத்தல் மற்றும் மர்ம சம்பவங்களின் பின்னணிகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.. தமிழக மக்கள் யாராலும் மறக்க முடியாத மிகக் கொடூரமான குற்றச் சம்பவம் இது. கோவையில் தொழிலதிபர் ரஞ்சித் ஜெயின் என்பவரது 10 வயது மகள் முஸ்கான் மற்றும் 7 வயது மகன் ரித்திக் ஆகியோர் பள்ளிக்குச் செல்வதற்காகத் தனியார் வேனில் ஏறினர். குழந்தைகளை வழக்கமாகப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன் டிரைவர் மோகன்ராஜ் தனது கூட்டாளி மனோகரனுடன் இணைந்து இரு குழந்தைகளையும் நடுவழியில் கடத்தினான். பணயப் பணம் கேட்டு மிரட்டத் திட்டமிட்ட கடத்தல்காரர்கள், பயத்தின் காரணமாகக் கடத்திய சில மணி நேரங்களிலேயே இரு பிஞ்சுக் குழந்தைகளையும் பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாயில் தூக்கி வீசிக் கொடூரமாகக் கொலை செய்தனர். தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் வீதிக்கு வந்து போராடும் அளவுக்குக் கொந்தளிப்பு உருவானது. இதையடுத்து தனிப்படை போலீசார் குற்றவாளிகளை வளைத்தனர். அப்போது முக்கிய குற்றவாளி மோகன்ராஜ் போலீஸ் பிடியிலிருந்து தப்ப முயன்றபோது என்கவுன்ட்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டான்.. மற்றொரு குற்றவாளி மனோகரனுக்கு உச்ச நீதிமன்றம் வரை தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. செஞ்சியில் இன்று பணயக் கோரிக்கையே இல்லாமல் மர்மம் நீடிப்பது போலன்றி, தமிழகக் குற்ற வரலாற்றிலேயே மிக அதிகமான பணயத் தொகையைக் கேட்டுத் திட்டமிடப்பட்ட துணிகரக் கடத்தல் இது. கோவையைச் சேர்ந்த தொழிலதிபரின் 8 வயது மகள் மவுனிகா, பள்ளிக்குச் செல்லும் வழியில் ஆயுதம் ஏந்திய கூலிப்படை கும்பலால் துப்பாக்கி முனையில் வேனில் இருந்து தூக்கிச் செல்லப்பட்டார். கடத்தல் கும்பல் சிறுமியை விடுவிக்க ₹5 கோடி பணயப் பணம் கேட்டு மிரட்டியது. தகவல் அறிந்ததும் தமிழக காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை மற்றும் உளவுத்துறை களமிறங்கியது. கடத்தல்காரர்கள் கேரளா மற்றும் கர்நாடக எல்லைப் பாதைகளைப் பயன்படுத்தி அடிக்கடி தங்களது இருப்பிடங்களை மாற்றினர். அதிநவீன வயர்லெஸ் சமிக்ஞைகள் மற்றும் ஒட்டுக்கேட்பு கருவிகள் மூலம் சிறுமி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பண்ணை வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். அங்கு நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் கடத்தல்காரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு, 8 வயது சிறுமி மவுனிகா எவ்வித காயங்களுமின்றி அதிரடியாகப் பத்திரமாக மீட்கப்பட்டார். தற்போது செஞ்சி ஆலம்பூண்டியில் கூரை வீட்டில் படுத்துறங்கிய குழந்தை ஹேமலதா நள்ளிரவில் சுவடு தெரியாமல் மாயமானது போன்றே நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் இது. தர்மபுரி - சேலம் எல்லையோர கிராமத்தில், வீட்டின் கொல்லைப்புற வாசலில் தாய் அருகில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார். அந்த வழக்கிலும் உள்ளூர் கிணறுகள், ஏரிகள் மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் சல்லடை போட்டும் தொடக்கத்தில் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. செஞ்சியில் சாமியார் சரவணன் மற்றும் சுடுகாடுகளை நோக்கிச் சிபிசிஐடி ஆய்வு மேற்கொண்டது போல, அங்கும் நள்ளிரவு மாந்திரீக பூஜைகள் மற்றும் புதையல் எடுப்பதற்காக நரபலி கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. பல வாரங்கள் நீடித்த ரகசிய விசாரணையில், உள்ளூர் போலி சாமியாரும், நெருங்கிய உறவினர்களும் இணைந்து நள்ளிரவில் குழந்தையைத் தூக்கிச் சென்று கொன்றது கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்பட்டனர். செஞ்சி வழக்கில் 14 நேஷனல் பெர்மிட் லாரிகளை நிறுத்தி சிபிசிஐடி நெடுஞ்சாலை ஆட்கடத்தல் கோணத்தை விசாரிப்பது போல, அன்று கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது. பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் சாலையோரத்திலிருந்து மர்ம காரில் கடத்தப்பட்டார். மாநில எல்லைப் பகுதி என்பதால் குற்றவாளிகள் மிக எளிதாகக் கர்நாடக எல்லைக்குள் நுழைந்து மறைந்தனர். சிசிடிவி தொழில்நுட்பங்கள் இல்லாத காலகட்டம் என்பதால், நெடுஞ்சாலையில் அமைந்திருந்த சுங்கச்சாவடிகள், டீக்கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. மாநிலங்களுக்கு இடையேயான வாகன நெட்வொர்க்குகளைக் கண்காணித்த தனிப்படை, பல நாட்கள் நீடித்த கடும் தேடுதலுக்குப் பிறகு வெளிமாநில எல்லைக்குள் வைத்து ஆட்கடத்தல் கும்பலை மடக்கிப் பிடித்தது. பொள்ளாச்சியில் வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி ஆட்டோவில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பெற்றோருக்கு எந்தவொரு முன்விரோதமும் இல்ல.. பணயக் கோரிக்கையும் வரவில்லை. சிசிடிவி கேமராக்கள் இல்லாத கிராமப்புறப் பாதைகள் வழியாகக் குழந்தை கொண்டு செல்லப்பட்டதால், ஆரம்பத்தில் காவல்துறை எந்தத் துப்பும் இன்றி இருட்டில் தடுமாறியது. ஆனால், உளவுப்பிரிவு ரகசியமாகக் கண்காணித்ததில், குழந்தை இல்லாத வசதியான தம்பதியினருக்குப் பெண் குழந்தைகளை லட்சக்கணக்கில் விற்றுவிடும் சட்டவிரோத தத்து ஏஜென்ட்டுகள் இதன் பின்னணியில் இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. சுமார் 12 நாட்கள் தீவிர வேட்டைக்குப் பிறகு, அண்டை மாவட்டமான திண்டுக்கல் அருகே ஒரு விவசாயத் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேற்கண்ட 5 வழக்குகளிலும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குப் பிறகு காவல்துறையின் உளவு வலைப்பின்னல் குற்றவாளிகளை அடையாளம் கண்டு முடிவுக்குக் கொண்டுவந்தது. ஆனால், செஞ்சி ஆலம்பூண்டி சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில், 28 நாட்களாகியும் உள்ளூர் போலீசாரின் ஆரம்பக்கட்ட கைரேகை தடய இழப்புகள், சிசிடிவி இல்லாத கிராமப்புற சூழல் மற்றும் திசைதிருப்பும் போலித் தகவல்களால் வழக்கு தொடர்ந்து முட்டுச்சந்திலேயே நிற்கிறது. கடந்த கால வரலாற்றுப் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு, வெளிமாநில ஆட்கடத்தல் நெட்வொர்க் மற்றும் உள்ளூர் ரவுடிகளின் சங்கிலியைச் சிபிசிஐடி உடைத்தால் மட்டுமே, 28 நாட்களாகத் தவித்து வரும் பெற்றோருக்குச் சிறுமி உயிருடன் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கை பிறக்கும்.1. கோவை பள்ளி சகோதரர்கள் முஸ்கான் - ரித்திக் கடத்தல் கொடூரம் (2010)
2. கோவை சிறுமி மவுனிகா கடத்தல் & துப்பாக்கிச் சண்டை மீட்பு (2000)
3. தர்மபுரி - சேலம் கிராமத்துச் சிறுமி நள்ளிரவு மாயம் & நரபலி சதி (1980கள்)
4. பெங்களூர் - ஓசூர் நெடுஞ்சாலை ஆட்கடத்தல் மர்மம்
5. பொள்ளாச்சி சிறுமி கடத்தல் & சட்டவிரோத தத்து நெட்வொர்க் (2014)
செஞ்சி வழக்கும்... விடை தெரியாத 28 நாட்களும்!