விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான வழக்கு, நாளுக்கு நாள் எதிர்பாராத பல மர்மத் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இரவு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை, அக்டோபர் 12 அதிகாலையில் மர்மமான முறையில் காணாமல் போனார்.
உள்ளூர் போலீசார் பல தனிப்படைகள் அமைத்துத் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால், வழக்கு சிபிசிஐடி சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஆலம்பூண்டி அரசுப் பள்ளியிலேயே தற்காலிக அலுவலகம் அமைத்து, தாய் பவானி, பாட்டி, பழைய குற்றவாளி ராஜதுரை எனப் பல முனைகளில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், சிறுமி மாயமான அன்று நள்ளிரவில் அரங்கேறிய மற்றொரு பகீர் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி ஹேமலதாவின் வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வசித்து வருபவர் மணிமேகலை என்ற மூதாட்டி. இவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சிறுமி மாயமான அதே அக்டோபர் 11 நள்ளிரவு அல்லது அக்டோபர் 12 அதிகாலை நேரத்தில், மணிமேகலையின் வீட்டின் கதவை யாரோ மர்ம நபர்கள் பலமாகத் தட்டியுள்ளனர். வீட்டில் தனியாக இருந்த அந்த மூதாட்டி, நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு மிகுந்த அச்சமடைந்தார். தனியாக இருக்கும் பயத்தில் அவர் கதவைத் திறக்காமல் உள்ளேயே இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து சத்தம் அடங்கியதும், காலையில் வெளியே வந்து பார்த்துள்ளார். சிறுமி காணாமல் போன செய்தி கிராமம் முழுவதும் பரவிய நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தற்போது சிபிசிஐடி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்த உடனேயே சிபிசிஐடி தனிப்படையினர் மூதாட்டி மணிமேகலையின் வீட்டிற்குச் சென்று அவரிடம் நேரடி விசாரணையைத் தொடங்கினர். கதவு தட்டப்பட்ட துல்லியமான நேரம் என்ன? என்பது குறித்து மூதாட்டியிடம் அதிகாரிகள் விரிவாக வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த புதிய தகவல் புலனாய்வு அதிகாரிகளுக்குப் பல முக்கியமான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது: நள்ளிரவில் நடமாடிய அந்த மர்ம நபர்கள் யார்? கொள்ளையடிக்கவோ அல்லது குழந்தையைக் கடத்தவோ ஊருக்குள் நுழைந்த நபர்கள், ஆட்கள் நடமாட்டம் இல்லாத வீடுகளைக் குறிவைத்து நோட்டமிட்டு கதவைத் தட்டினார்களா? ஏற்கனவே சிறுமியின் வீட்டில் பீரோவில் நகையும் பணமும் இருப்பதாகக் குற்றவாளிகளுக்குத் தகவல் தெரிந்திருந்தது என்ற கோணத்தில் விசாரணை நடக்கும் சூழலில், கொள்ளை அல்லது கடத்தல் கும்பல் வழி தெரியாமல் அல்லது வீடு மாறி மணிமேகலையின் கதவைத் தட்டியதா என்ற கேள்வியும் எழுகிறது. சிறுமி மாயமான அதிகாலையில் எதிர்வீட்டுப் பெண் "அம்மா.. அம்மா" என்ற அலறல் சத்தத்தைக் கேட்டதாகக் கூறியிருந்தார். அதே காலகட்டத்தில் 200 மீட்டர் தொலைவில் கதவு தட்டப்பட்ட சம்பவமும் நடந்துள்ளதால், ஊருக்குள் மர்ம நபர்கள் தாராளமாக நடமாடியது உறுதியாகியுள்ளது. மூதாட்டி மணிமேகலையின் வீட்டில் இருந்து சிறுமியின் வீட்டிற்குச் செல்லும் 200 மீட்டர் இடைப்பட்ட சந்து, அங்குள்ள முட்புதர்கள் மற்றும் பாதைகளை சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். தாய், பாட்டி, குற்றவாளி ராஜதுரை மற்றும் வெளிமாநிலத் தொடர்புகளோடு சேர்த்து, மூதாட்டி மணிமேகலை அளித்த இந்த வாக்குமூலம், சம்பவத்தன்று நள்ளிரவு ஊருக்குள் சுற்றிய அந்த மர்ம நபர்கள் யார் என்பதை அடையாளம் காண மிக முக்கியமான தடயமாக மாறியுள்ளது.200 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் நள்ளிரவு தட்டப்பட்ட கதவு
மூதாட்டி மணிமேகலையிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை
கதவைத் தட்டியவர்கள் யாரேனும் பேசிய சத்தம் கேட்டதா? எத்தனை பேர் வெளியே நின்றிருந்தார்கள்?
கதவைத் தட்டிய நபர்கள் எந்தப் பாதையை நோக்கிச் சென்றார்கள்?
முன்னதாக அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய ஆட்கள் நடமாட்டம் இருந்ததா?பூச நட்சத்திரம் கடக ராசி..சுத்த ஜாதகத்தில் பிறந்த செஞ்சி சிறுமி! விற்கப்பட்டாரா? சுறுசுறு சிபிசிஐடி!
ழுந்திருக்கும் புதிய சந்தேகங்கள் என்னென்ன?
செஞ்சி சிறுமி கேசில் விஜய் அரசு தோல்வி! மாயமாகி 17 நாட்கள்.. ஒரு குழந்தையைக் கூட மீட்க முடியாதா?
துப்பு துலக்கப் புதிய கள ஆய்வு