விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான வழக்கில், சிபிசிஐடி அதிகாரிகள் மிக அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளனர். அக்டோபர் 11 அன்று இரவு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு, அதிகாலையில் மாயமான சிறுமியைத் தேடும் பணி 18 நாட்களைக் கடந்து நீடித்து வருகிறது.
தாய் பவானி, பாட்டி, பழைய குற்றவாளி ராஜதுரை, சாமியார், 200 மீட்டர் தள்ளி கதவு தட்டப்பட்ட மூதாட்டி மணிமேகலை எனப் பலரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டும் சிறுமி குறித்த உறுதியான தகவல் எதுவும் இதுவரை சிக்கவில்லை. இந்நிலையில், "இந்த வழக்கு ஆரம்பத்திலேயே திசை திருப்பப்பட்டதா? அல்லது முதல் கட்ட விசாரணையில் காவல்துறையினர் சொதப்பிவிட்டார்களா?" என்ற சந்தேகம் சிபிசிஐடிக்கு எழுந்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை முதலில் விசாரித்த சத்யமங்கலம் காவல் நிலைய போலீசார் மற்றும் மாவட்ட தனிப்படை அதிகாரிகளிடம் விரிவான விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
ஒரு குழந்தை காணாமல் போனால் முதல் 24 முதல் 48 மணி நேரங்கள் மிக மிக முக்கியமானவை. இதை காவல்துறையில் 'Golden Hours' என்று அழைப்பார்கள். அந்த நேரத்தில் எடுக்கப்படும் தீவிர நடவடிக்கைகளே குழந்தையைக் கண்டுபிடிக்க உதவும். ஆனால், செஞ்சி வழக்கில் உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது வழக்கை மறுஆய்வு செய்த சிபிசிஐடி அதிகாரிகளுக்கு உள்ளூர் காவல்துறையின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளில் பல குழப்பங்களும் முரண்பாடுகளும் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், தொடக்கத்தில் களத்தில் நின்ற காவலர்கள், எஸ்.ஐ, மற்றும் தனிப்படை போலீசாரை நேரில் அழைத்து வாக்குமூலம் பெறத் திட்டமிட்டுள்ளனர். சிறுமி படுத்திருந்த அறை, வீட்டின் வாசற்படி, மற்றும் கொல்லைப்புறம் ஆகிய பகுதிகளை போலீசார் ஆரம்பத்திலேயே சீல் வைத்துத் தடயங்களைச் சேகரித்தார்களா அல்லது ஊர் மக்களும் பொதுமக்களும் உள்ளே சென்று தடயங்களை அழிக்க அனுமதித்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. விரல் ரேகைகள் மற்றும் கால்தடங்களைச் சேகரிப்பதில் மெத்தனம் காட்டப்பட்டதா என ஆராயப்படுகிறது. சிறுமியின் வீட்டில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் உள்ள மூதாட்டி மணிமேகலையின் வீட்டு கதவை நள்ளிரவில் மர்ம நபர்கள் தட்டியுள்ளனர். இந்த மிக முக்கியமான தகவலை முதல் 10 நாட்கள் விசாரித்த உள்ளூர் போலீசார் ஏன் கவனிக்கத் தவறினார்கள்? அப்பகுதியில் முறையாக வீடு வீடாகச் சென்று விசாரிக்கவில்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. செஞ்சி, ஆலம்பூண்டி எல்லைகளில் உள்ள சிசிடிவி பதிவுகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட செல்போன் கோபுர அழைப்புகளை (Tower Dump) ஆரம்பத்திலேயே சரியாக வகைப்படுத்தி சந்தேக நபர்களைப் பிடித்தார்களா, அல்லது தேவையில்லாத நபர்களை மட்டும் விசாரித்து நேரத்தை வீடித்தார்களா என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது. சிறுமி மாயமான அன்று தாயார் பவானி மற்றும் குடும்பத்தினர் ஆரம்பத்தில் கூறிய தகவல்களை உள்ளூர் போலீசார் முறையாக ஆவணப்படுத்தினார்களா? அல்லது வாய்மொழி விசாரணையோடு முடித்துக் கொண்டு கோப்புகளில் தவறான தகவல்களைப் பதிவு செய்தார்களா என்ற கோணத்திலும் சிபிசிஐடி இறங்கியுள்ளது. உள்ளூர் போலீசார் செய்த சிறு சிறு தவறுகளும், குழப்பமான பதிவுகளுமே தற்போது வழக்கில் துப்பு துலங்காமல் போனதற்குக் காரணமா என்பதை உறுதிப்படுத்தவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்ட காவலர்களிடம் நடத்தப்படும் இந்த விசாரணை, வழக்கின் உண்மையான திசையைக் காட்டவும், விடுபட்டுப் போன முக்கிய தடயங்களை மீண்டும் வெளிக்கொண்டு வரவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தொடக்கக் கட்ட விசாரணையை கையில் எடுப்பது ஏன்?
சிபிசிஐடி முன்வைக்கும் முக்கிய கேள்விகள் என்னென்ன?
தமிழ்நாட்டுல என்னங்க நடக்குது? செஞ்சி சிறுமி மாயமாகி 15 நாள் ஆச்சு! சிபிஎம் சண்முகம் கவலை!
சிசிடிவி மற்றும் டவர் தகவல்களைக் கையாள்வதில் தாமதமா?
Gingee Bhavani: வீடு வராத செஞ்சி சிறுமி! சிபிசிஐடி விசாரணைக்கு மத்தியில் தாய் தினமும் செல்லும் இடம்!
ஆரம்பக்கட்ட சொதப்பல்களை சரிசெய்யும் முயற்சி