செஞ்சி சிறுமியின் தாய் செய்த செயல்.. பார்த்ததும் அப்படியே ஸ்டன் ஆன கிராமம்.. என்னங்க நடக்குது?

  • விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டுப் படுக்கையறையில் தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை, அதிகாலையில் மாயமானார்.

    Advertisement

    உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. டிஎஸ்பி வேல்முருகன், டிஎஸ்பி கீதா தலைமையிலான தனிப்படையினர் அரசுப் பள்ளியிலேயே முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருபுறம் தாய் பவானியிடம் பல மணி நேர விசாரணைகள், பாட்டியிடம் வாக்குமூலம், பழைய குற்றவாளி ராஜதுரை தூக்கல், 600 செல்போன் எண்கள் டேப் எனப் புலனாய்வுத் துறையினர் வழக்கு வளையத்தை இறுக்கிக் கொண்டிருக்கின்றனர்.

    Advertisement

    இப்படி ஒருபுறம் கடுமையான அதிகாரப்பூர்வ விசாரணைகள் சுழன்றடித்தாலும், மறுபுறம் பெற்ற குழந்தையின் பிரிவைத் தாங்க முடியாமல் ஒரு தாயாக பவானி தினந்தோறும் நடத்தி வரும் கண்ணீர் வேண்டுதல் ஒட்டுமொத்தப் பகுதியையும் கண்கலங்க வைத்துள்ளது.

    வீட்டின் அருகே உள்ள கோயிலில் கண்ணீர் வழிபாடு

    சிபிசிஐடி அதிகாரிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு வெளியே வரும் தாய் பவானி, நேராகத் தனது வீட்டின் அருகே உள்ள சிறிய விநாயகர் கோயிலுக்குச் செல்கிறார்.

    அங்கு சாமி சந்நிதியில் அமர்ந்து, கைகளில் கற்பூரத்தை ஏற்றி வைத்துக்கொண்டு, "என் புள்ள எங்கிருந்தாலும் பத்திரமா இருக்கணும்... அவளை எங்கிட்ட கொண்டு வந்து சேர்த்துடு சாமீ" என்று நெஞ்சம் வெடித்துக் கதறி அழுது வழிபாடு செய்கிறார். கோயிலில் பூ கட்டிப் போட்டுப் பார்த்தும், கிராமத்துக் கோயில்களுக்குச் சென்று வேண்டுதல்களை வைத்தும் தன் மகளின் வருகைக்காக ஏங்கித் தவித்து வருகிறார்.

    Advertisement

    கற்பூரம் ஏற்றித் தரையில் விழுந்து வணங்கி, கண்ணீர் மல்க அவர் வேண்டுவதைப் பார்க்கும் அந்தப் பகுதி மக்களும் அக்கம் பக்கத்தினரும் கண்கலங்கி நிற்கின்றனர்.

    செஞ்சி சிறுமி மாயம் எங்கே? எப்படி காணவில்லை? சிக்குவது யார்? முழுமையான ரவுண்ட்-அப் ரிப்போர்ட்

    "அவ இன்னும் உயிரோடதான் இருக்கா!" - தாயின் அசைக்க முடியாத நம்பிக்கை

    சிபிசிஐடி அதிகாரிகள் ஊரையே சலித்துத் தேடி வரும் நிலையில், "என் மகள் இன்னும் உயிருடன் பத்திரமாக எங்கோ இருக்கிறாள்; அவள் கண்டிப்பாக எங்களிடம் திரும்பி வருவாள்" என்று தாய் பவானி அனைவரிடமும் அழுதுகொண்டே கூறி வருகிறார்.

    Advertisement

    சம்பவம் நடந்து 18 நாட்களைக் கடந்த நிலையிலும், காடுகளிலோ அல்லது கிணறுகளிலோ சிறுமிக்கு அசம்பாவிதம் நடந்ததற்கான எந்தவித நேரடி உடல் தடயமும் கிடைக்கவில்லை. இது காவல்துறைக்கும் மட்டுமல்லாது, "என் பிள்ளை எங்கு இருந்தாலும் பத்திரமாக இருப்பாள்" என்ற தாயின் நம்பிக்கையையும் உயிர்ப்புடன் வைத்துள்ளது.

    செஞ்சி சிறுமி கிடைக்கல.. அன்று இரவு 12 மணி நேரம் எரிந்த செங்கல் சூளை.. காட்டில் இறங்கிய சிபிசிஐடி!

    விசாரணைகளுக்கு நடுவே உருகும் தாய் பாசம்

    இந்த வழக்கில் திடீர் பிறந்தநாள் கொண்டாட்டம், நள்ளிரவில் கதவு திறந்திருந்தது, சாமியார் விவகாரம், மாஜி ஊராட்சி மன்ற தலைவர் விவகாரம் எனப் பல முரண்பாடுகளை முன்வைத்துத் தாய் பவானியிடம் சிபிசிஐடி பல மணி நேரம் துருவித் துருவி விசாரித்து வருகிறது. காவல் துறையினரின் சந்தேக வளையத்திற்குள் தாய் வைக்கப்பட்டிருந்தாலும், பச்சிளம் மகளைப் பறிகொடுத்துவிட்டு ஒரு தாய் தினந்தோறும் கோயிலில் மண்டியிட்டு அழும் காட்சி, சட்டத்தின் பார்வைகளையும் தாண்டிப் பார்ப்போரை உலுக்கிப் போடுகிறது.

    Advertisement

    "விசாரணைகள் ஒருபுறம் நடக்கட்டும்... ஆனால் அந்தத் தாயின் கண்ணீருக்கு விடை கிடைக்க வேண்டும். குழந்தை ஹேமலதா உயிருடன் மீட்கப்பட்டு தாயின் மடிக்கு மீண்டும் வர வேண்டும்" என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே வேண்டுதலாக உள்ளது.

    English Summary

    Gingee Missing Girl Case: Distraught Mother Lights Camphor Daily at Temple as 18-Day Search