ஓயாத மர்மம்! சட்டென விபூதி குங்குமத்தோடு கேமரா முன் வந்த செஞ்சி சிறுமியின் தாய்! வழக்கில் திருப்பம்?

  • விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் 22 நாட்களைக் கடந்து ஒட்டுமொத்த தமிழகத்தின் மனசாட்சியையும் உலுக்கி வருகிறது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, அதிகாலையில் படுக்கையறையிலிருந்து மாயமான சிறுமியைத் தேடி காடுகள், விவசாயக் கிணறுகள், ஏரிகள் என சல்லடை போட்டும் இதுவரை எந்தவொரு உறுதியான துப்பும் கிடைக்கவில்லை.

    Advertisement

    உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் சிறுமி கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனாலும், 22 நாட்கள் ஆகியும் சிறுமி எங்கே இருக்கிறார் என்ற எந்தவொரு தகவலும் கிடைக்காததால் குடும்பத்தினர் பெரும் வேதனையில் தவித்து வருகின்றனர்.

    Advertisement

    இந்த நிலையில், சிறுமியின் தாய் பவானி கண்ணீர் மல்க ஊடகங்களுக்கு உருக்கமான பேட்டி அளித்துள்ளார்.

    எங்களுக்கு ஆதரவு தரும் மக்களுக்கு நன்றி... ஆனால் சிலர் வதந்தி பரப்புகிறார்கள்!"

    பேட்டியின் போது கண்கலங்கியபடி பேசிய தாய் பவானி, "எங்கள் குழந்தை காணாமல் போன நாள் முதல் எங்களுக்கு ஆதரவாக ஊடகங்களும், சமூக வலைதளங்களில் பொதுமக்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். அதற்காக நாங்கள் அனைவருக்கும் கைகூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஆனால், அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் சிலர் எங்களைப் பற்றி மிகவும் தவறாகப் பேசி வருகிறார்கள். எங்களைப் பற்றிப் பரப்பப்படும் தவறான தகவல்களும், உண்மைக்கு மாறான வதந்திகளும் எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய மன உளைச்சலையும், தாங்க முடியாத உளவியல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்துகிறது" என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.

    Advertisement

    20 நாட்களாக வேலைக்குப் போகவில்லை... பசி பட்டினியில் கிடக்கிறோம்!

    குழந்தையை இழந்து நிற்கும் தங்கள் குடும்பத்தின் தற்போதைய அவல நிலையை விவரித்த அவர்,
    "குழந்தை காணாமல் போன கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நாங்கள் எந்த வேலைக்கும் செல்லவில்லை. வீட்டில் சமையல் செய்ய வழியின்றி, பசி பட்டினியிலேயே நாட்களைக் கழித்து வருகிறோம்.

    செஞ்சி சிறுமி.. முதல் நாளுக்கே திரும்பிய விசாரணை! தந்தை வடிவேலுவை மீண்டும் வளைத்த சிபிசிஐடி.. ஏன்?

    ஊரில் யார் என்ன பேசினாலும் பரவாயில்லை; எங்களுக்குப் பணமோ, புகழோ, வேறு எந்த உதவியோ தேவையில்லை. எப்படியாவது எங்கள் குழந்தையை உயிருடன் கண்டுபிடித்து எங்களிடம் ஒப்படைத்தால் போதும். அது ஒன்று மட்டுமே எங்கள் குடும்பத்தின் ஒரே ஆசை" என்று நெஞ்சம் வெடித்துக் கதறினார்.

    Advertisement

    முதல்வருக்கும் காவல்துறைக்கும் கண்ணீர் கோரிக்கை

    வழக்கு பல திசைகளில் சுழன்றடித்தாலும் இன்னும் குழந்தை கிடைக்காததால், தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார், "தமிழக முதல்வரும், காவல்துறை உயர் அதிகாரிகளும் எங்கள் ஏழைக் குடும்பத்தின் கண்ணீரைப் பார்த்து உரிய நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகளைப் பத்திரமாக மீட்டுத் தந்து எங்கள் வாழ்விற்கு விடிவுகாலம் பிறக்க வைக்க வேண்டும்" என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.

    செஞ்சி சிறுமி மாயம்.. 22 நாட்களாகியும் முடியல! சுழன்றடிக்கும் யூ டர்ன்.. கேசில் தோற்ற தவெக அரசு
    Advertisement

    ஓயாத மர்மம்... துடிக்கும் சாமானிய குடும்பம்

    சிறுமியின் தாய், தந்தை, பாட்டி, பழைய குற்றவாளி, மாஜி ஊராட்சி மன்ற தலைவர் எனப் பலரைச் சுற்றி சிபிசிஐடி அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், மறுபுறம் பெற்ற குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு, சமூக வலைதளங்களில் பரவும் அவதூறுகளையும், ஏழ்மையையும் ஒருசேரச் சுமக்க முடியாமல் அந்தத் தாய் தவித்து வரும் நிலை காண்போரை உலுக்கியுள்ளது.

    சிறுமி ஹேமலதாவை எந்தவித தாமதமும் இன்றி உடனடியாக உயிருடன் மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து அரசுக்கு அழுத்தமான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

    English Summary

    Gingee Missing Girl Case: Mother Bhavani Breaks Down Over Online Rumors as Search for Hemalatha Enters Day 22