விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் 24 நாட்களைக் கடந்து நீடித்து வருகிறது. அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார்.
உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. தாய் பவானி, பாட்டி, தந்தை வடிவேலு, சிறையில் இருந்து எடுக்கப்பட்ட பழைய குற்றவாளி ராஜதுரை, அவரது கூட்டாளி அரவிந்த், சாமியார், சுடுகாடுகள், காடுகள் மற்றும் நள்ளிரவில் கடந்து சென்ற 14 நேஷனல் பெர்மிட் லாரிகள் எனப் பல கோணங்களில் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், "நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள தாதகிரி முருகன் கோவிலில் ஹேமலதாவைப் போன்ற உருவ அமைப்புக் கொண்ட சிறுமியை வயதான தம்பதியினருடன் பார்த்தேன்" என்று பெண் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் நாமக்கல்லில் முகாமிட்டு விசாரணையை முடுக்கிவிட்டனர். பெண் அளித்த தகவலின் அடிப்படையில் உடனடியாகக் களமிறங்கிய தனிப்படை போலீசார், சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற தாதகிரி முருகன் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை முழுமையாக ஆய்வு செய்தனர். சிறுமி கோவிலுக்கு வந்ததாகக் கூறப்பட்ட குறிப்பிட்ட நாளான அக்டோபர் 29 மற்றும் அதற்குப் பிந்தைய நாட்களின் பதிவுகளைக் காவல் துறையினர் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுத் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தியுள்ளனர். கோவிலுக்குள் நுழைந்தவர்கள் யார்? வயதான தம்பதியினருடன் வந்த சிறுமி உண்மையில் செஞ்சியில் மாயமான ஹேமலதாதானா? அவரது நடை, உடை மற்றும் உடல் அங்க அடையாளங்கள் ஒத்துப்போகிறதா என்பதைத் தனிப்படையினர் துல்லியமாக உருப்பெருக்கி (Zoom) ஆய்வு செய்து வருகின்றனர். கோவில் வளாகத்தின் சிசிடிவி காட்சிகள் மட்டுமல்லாமல், கோவிலுக்குச் செல்லும் பிரதான சாலைகள், சந்திப்புகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள தனியார் கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ பதிவுகளையும் போலீசார் சேகரித்துள்ளனர். கோவிலுக்கு வந்த நபர்கள் எந்த வாகனத்தில் வந்தார்கள்? (பைக், கார் அல்லது அரசுப் பேருந்தா?) அவர்கள் சேந்தமங்கலம் சாலையைக் கடந்து நாமக்கல் நகருக்குள் நுழைந்தார்களா அல்லது மோகனூர், ராசிபுரம் வழித்தடங்களுக்குச் சென்றார்களா? உள்ளூர் முகவரிகள் மற்றும் கடைகளில் உள்ள சிசிடிவி பதிவுகளில் அந்த நபர்களின் நடமாட்டம் பதிவாகியுள்ளதா? என்பதை அறிய சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைத் தனிப்படை போலீசார் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். "என் மகள் கண்டிப்பா உயிருடன் பத்திரமாகத்தான் இருக்கிறாள்" என்று தாய் பவானி கடந்த இரண்டு நாட்களாக ஆணித்தரமாகத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது நாமக்கல் சேந்தமங்கலம் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் சிக்கியிருப்பது வழக்கில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் எல்லையைத் தாண்டி மேற்கு மாவட்டமான நாமக்கல்லில் தீவிரமடைந்துள்ள இந்த சிசிடிவி ஆய்வு, 24 நாட்களாகப் பசி பட்டினியோடு கண்ணீரில் தவித்து வரும் குடும்பத்தினருக்கு ஒரு நல்ல செய்தியை மிக விரைவில் கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தாதகிரி முருகன் கோவில் சிசிடிவி பதிவுகள் பறிமுதல்
என் புள்ள உசுரோடதான் இருக்கா! செஞ்சி வழக்கில் தாயின் திடீர் நம்பிக்கை.. பின்னணியில் என்ன நடந்தது?
சுற்றுவட்டார வீடுகள் மற்றும் சாலை கேமராக்களும் ஆய்வு
டிவிஸ்ட்! செஞ்சி சிறுமியை காணாமல் போன அதே டிரஸ்ஸில் நாமக்கல்லில் பார்த்தேன்! பெண் பகீர் தகவல்
உயிருடன் மீட்கப்படுவாரா? துளிர்க்கும் நம்பிக்கை