உளுந்தூர்பேட்டை அருகே பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து.. 2 மணி நேரம் நடுவழியில் தவித்த பயணிகள்!

  • கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஓட்டுநரின் கவனக்குறைவால் பள்ளத்தில் சிக்கியது அரசுப் பேருந்து. இதனால் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் 2 மணி நேரம் காத்திருந்தனர்.

    Advertisement

    சென்னையில் இருந்து பெரம்பலூருக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்றது. இந்தப் பேருந்து உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் செல்வதற்காக சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் கவனக்குறைவாக பேருந்து நிலையம் செல்லும் சாலையை மறந்து, உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் உள்ள சர்வீஸ் சாலைக்கு இடதுபுறமாக திரும்பியுள்ளார்.

    Advertisement

    அப்போது சர்வீஸ் சாலையில் உள்ள பள்ளத்தில் பேருந்து சிக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் இரண்டு மணி நேரம் வரை பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    பின்னர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பேருந்து மீட்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து பேருந்து, பயணிகளுடன் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    English Summary

    Near Ulundurpet, a government bus ended up stuck in a ditch due to the driver's negligence. More than 30 passengers were left waiting for two hours.