ஆபாசமாக பேசி! கொலை மிரட்டல் விடுத்த அரசு கால்நடை மருத்துவர்! மன்னிப்பு கேட்ட அமைச்சர் கமலி!

  • விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் பசுவிற்கு சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் அரசு மருத்துவர் ஒருவர் ஆபாசமாக சம்பவத்தை தொடர்ந்து, அதற்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அமைச்சர் கமலி தெரிவித்துள்ளார். மேலும் அந்த கால்நடைத்துறை உதவி மருத்துவர் சங்கரநாராயணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம் கூனிமேடு பகுதியில் உள்ள கால்நடை துறை மருந்தகம் உதவி மருத்துவராக சங்கரநாராயணன் பணியாற்றி வருகிறார். அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர், தனது உடல்நிலை சரியில்லாத பசுமாட்டை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்.

    Advertisement

    அப்போது அங்கு பணியில் இருந்த உதவி மருத்துவர் சங்கரநாராயணனிடம் பசுவுக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரை, சங்கரநாராயணன் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் இதை தட்டிக் கேட்ட அந்த நபருக்கு கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

    இது தொடர்பான வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கால்நடைத் துறை அமைச்சர் கமலி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாதிக்கப்பட்ட நபர் தனிப்பட்ட முறையில் வீடியோ அனுப்பியதாகவும் அந்த வீடியோவை கொண்டு தான் நடந்த சம்பவம் குறித்து விசாரணை கொண்டேன்.

    விசாரணையில் அவர் பேசியது உண்மை என தெரிய வந்த நிலையில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

    Advertisement

    உதவி மருத்துவர் சங்கரநாராயணன் அந்த நபரை பேசியதற்காக, தான் அந்த துறை சார்ந்த அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் உண்மையிலே மன்னிப்பு கேட்பதாக கூறினார். மேலும் இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாது. அனைத்து மருத்துவர்களிடமும் கால்நடைகளுடன் வரும் மக்களிடம் பணிவாக நடக்க சொல்லி இருப்பதாக கூறினார்.